Thursday, November 24, 2011

ஜெயமோகன்...........அறம்.

ஜெயமோகனின்......அறம் ......உண்மை மனிதர்களின் கதைகள்

விரைவும் சுயநலமும் முக்கியமாகிப் போன உலகில் மானுடத்தின் நேர்மறை
மாண்புகளையும் ஆதார விழுமியங்களையும் உணர்ச்சி பொங்க ஜெயமோகன்
தான் கண்ட மற்றும் கேட்ட ஆளுமைகளின் வாழ் சரிதத்தை படைத்துள்ளார்.

அறம் தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளும் மனிதன் எப்படி இருக்க வேண்டும்,
எப்படி இருந்தால் உன்னதத்தை நோக்கி பயணப்படலாம் என்னும் லட்சியவாதத்தை
மறுபரிசீலனை செய்யும் மகத்தான படைப்புகள்............