Friday, March 9, 2012

பொழுது புலர்கின்ற வேளையிலே....






சுட்டும்   விழிச்   சுடரே....


மஞ்சளுக்கு   மஞ்சள்  வண்ணம்   பூசியது   யாரோ


சரக்கொன்றை   மலர்கள்   பூத்து விட்டன


சித்திரைப்   பெண்   வருகிறாளோ


பூத்தது    புன்னகை
 

முதல்   சந்தோஷம்

Tuesday, March 6, 2012

எனது நூலகங்கள் – எம்.கோபாலகிருஷ்ணன் - சூத்ரதாரி


தியாகு புத்தக நிலையத்தை ஏறக்குறைய 30 ஆண்டுகளாக நட்த்திவரும் தியாகராஜன் அடிப்படையில் ஒரு நல்ல வாசகர். புத்தகங்களின் மீது அளவற்ற பிரியம் கொண்டவர். இதைத் தவிர எனக்கு வேறெதுவும் தெரியாதே என்று அவ்வப்போது சொல்லும் அளவிற்கு புத்தகங்களோடு ஒன்றிப் போனவர். ஒரு லெண்டிங் லைப்ரரி என்ற அளவில்  அதை அணுகினாலும்கூட அங்கிரிக்கும் புத்தகங்களின் வகைப்பாடு நம்மை பிரமிக்கச் செய்பவை. தமிழ் புத்தகங்களைக் காட்டிலிம் ஆங்கிலப் புத்தகங்கள் அதிகம். வாசகர்கள் அதிகமும் கேட்கும் பிரபல ஆங்கில நாவலாசிரியர்களோடு சேர்த்து மார்க்வெஸ்ஸையும்,சரமகோவையும்,குந்தர் கிராச்ஸையும் பார்க்க முடியும். ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் எல்லா நூல்களையும் இங்கே பார்க்க முடியும்.ராமசந்திரகுகா,அஸ்கர்அலிஎஞ்சினியர்
குஷ்வந்த சிங், அருந்ததி ராய், என்று ஆங்கிலக் கட்டுரைகளை அங்கே நான் பார்த்திருக்கிறேன்.
அரசியல், ஆன்மிகம், விளையாட்டு, சோதிடம்,வானவியல், சுயசரிதம், சமையல், அழகுக்கலை என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் புத்தகங்கள் இடம் பெற்றிருக்கும். யாராவது ஒருவர் புதிய நூல் ஒன்று வெளியாகியிருப்ப்து குறித்து வந்து சொன்னால் அடித்த சில நாட்களில் அது தியாகுவின் கடையில் கிடைக்கும். நல்ல ஒரு புத்தகத்துக்கு நிறைய வாசகர்கள் உண்டு என்றால் கூடுதல் பிரதிகளை ஏற்பாடு செய்வார். அவருடைய நூலகத்துக்கு வரும் வாசகர்களின் ரசனையை அறிந்து அவர்கள் விருப்பத்திற்கேற்ற புத்தகங்களை அறிமுகம் செயவார். அவருடைய வாசகர்களில் பலர் தேர்ந்த படிப்பாளிகள். அந்த ரசனையை வள்ர்த்தெடுத்ததில் தியாகுவிற்குப் பெரும் பங்கு உண்டு. குழந்தைகளுக்காக என்று தனியாக ஒரு பிரிவு உண்டு.
தியாகுவிற்கு அந்தப் புத்தக நிலையம்தான் தொழில். ஒரு தொழிலாக மட்டும் அதைத் திறம்பட நட்த்துவது என்பது இப்போதைய காலகட்ட்த்தில் கடினமாவது. ஆனால் புத்தகங்கள் மீதான அவருடைய ஆழமான உறவு வியாபார நோக்கத்திலான லாப நட்டங்களைப் பொருட்படுத்தாத ஒரு பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற ஒரு உணர்வுநிலை தொழில் சார்ந்த கணக்குகளிக்கு எதிரானது. எப்போதுமே  லாபநஷ்டங்களைப் பார்க்காத சிலரின் அக்கறைகளே சமூகத்திற்கு மேன்மையான விஷயங்களைச் சாத்தியப் படுத்துக்கின்றன. புத்தகங்களின் மீதான அந்த உற்வைத் தியாகுவின் கடையில் உள்ள புத்தக அடுக்குகளைப் பார்த்தாலே தெரியும். மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படும் நூல் நிலையம் அது. மிக லேசாக எப்போதும் ரமண மந்திரம் ஒலிக்கும் அந்தச் சூழல் புத்தகங்களைத் தேடுபவர்களுக்கு இதமான ஒன்று.
தியாகுவிற்கு, தான் வாங்கி வைத்திருக்கும் சில நூல்களுக்கு ஒரு வாசகர்கூட இல்லை என்று தெரியும். புத்தம் புதுசாக அது அப்படியே தட்டில் உட்கார்ந்திருக்கும். ஆனாலும் அதைத் தெரிந்துதான் வாங்கியிருப்பார். இருக்கட்டுமே,யாராச்சும் படிக்காமயா போயிருவாங்கஎன்று சிரிப்பார்.
தியாகுவின் நூல் நிலையம் கோவையின் மிகத் தரமான வாசகர்கள் ஒன்றுகூடும், முக்கியமான ஒரு புள்ளி. திட்டமிடப்படாத சந்திப்புகள் பலவற்றில் அப்படியான பல்வேறு நண்பர்களை நான் சந்தித்ததுண்டு. எழுத்தைக் குறித்தும் வாசிப்பைக் குறித்துமான பல கேள்விகளுக்கான ஆழமான பதில்களைத் தந்த உரையாடல்கள் பலவும் சாத்தியப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நாள் என்று எதுவுமில்லாது, ஒரு தொலைபேசிச் செய்தி வழியாக நண்பர்கள் மாலையில் ஒன்று கூடிப் பேசிக்கொள்வோம். அன்னபூர்ணாவின் காப்பி சுவைக்கு தியாகு அடிமை (தனிக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்) காப்பிக்குபிறகு நூல் நிலைய வாசலில் நின்றபடியே உரையாடல் நெடுநேரம் தொடரும். புகைப்பட்த்துறை, உலக சினிமா, வாசிப்பு, சுற்றுச்சூழல், கானுயிர்,தொழில்நுட்பம் என்று அவரவர் துரையில் முக்கியமான பங்களிப்புகளை,வெளியே தெரியாமல் தம்பட்டம் அடிக்காமல், செய்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். இவர்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கும் புள்ளி வாசிப்பும் தியாகு புத்தக நிலையமும்தான்.

புத்தக அறிமுகம்,விமர்சனம்,வெளியீடு விழா போன்ற சம்பிரதாயங்களில் அசலான வாசகர்களை நாம் சந்திக்க முடியாது. நல்ல ஒரு வாசகன் இதுபோன்ற இடங்களைவிட்டு ஒதுங்கி ஓடுபவன். அத்தகைய நல்ல வாசகர்களை த்யாகு புத்தக நிலையம் போன்ற இடங்களில்தான் நாம் பார்க்க முடியும். ஒரு மாலைநேரத்தில் தனக்குத் தேவயான புத்தகத்தை மிகப் பொறுமையாகத் தேடி எடுத்துச் செல்பவன் அவன். அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது அவனால் சொல்லப்படும் மிகச் சில சொற்களே அந்தப் புத்தகத்தைக் குறித்து உண்மையான விமர்சனமாக இருக்கும். எழுத்தாளனின் காதில் அவை விழாமலேகூடப் போகலாம். ஆனால் அந்தப் புத்தகத்தின் இருப்பை அர்த்தப்படுத்துவதும் கேள்விக்குள்ளாக்குவதும் அந்தச் சில சொற்களே.

த்யாகு புத்தக நிலையத்தின் வாசலில், மரங்களின் கிளைகள் மிக மெதுவாக அசைந்திருக்க, வாகனங்களின் முகப்பு விளக்குகளின் ஒளி பட்டும் விலகியும் ஒட, நண்பர்களிடம் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது பல சமயங்களில் எனக்கு அத்தகைய சில சொற்கள்தான் உரத்து ஒலிப்பது போல இருக்கும். அன்றிரவு என்னை எழுதவோ, எழுத முடியாமலோ செய்பவை அச்சொற்களே!

ஒரு வாசகனாக என்னை உருவாக்கிய பாதைகளைத் திரும்பிப் பார்க்கும் இந்த முயற்சியில் நான் சொல்லியிருப்பவை கொஞ்சமே. ஒவ்வொரு வாசகருமே இதுபோன்ற பாதைகளின் வழியாகத்தான் கடந்து வந்திருப்பார்கள். ஏதாவது ஒரு நூலகம், யாராவது ஒரு நண்பர் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நம்மை அவ்வாறு திசைமாற்றியிர்ப்பார்கள். நாமும் அப்படி யாருக்கேனும் ஒரு திசை மாற்றத்தைச் சாத்தியப்படுத்த முடியுமானால் அதுவே நாம் கடந்து வந்த பாதைகளின் பொருளாக அமையும்.
 சூத்தரதாரி எம்.கோபாலகிருஷ்ணன்  மணல் கடிகை

திட்டமிடப்படாத உணர்தல்தான், அடையாளம் காணப்படும் நல்ல வாசகன்......
அந்தகனம் தரும் நிறைவு உணர்பவர்களுக்கே புரியும்.
புரிதலுடன் பதியப்பட்ட எழுத்துக்களின் கோர்வை, வார்த்தை ராகங்களாக மனதினில் நிறைவையும் , நெகிழ்வையும் தந்தது..........

     ப்ரியங்களுடன்
     த்யாகராஜன்.



  மேலும் வாசிக்க Click Here

Saturday, March 3, 2012

புன்னகைக்க சொல்லிக் கொடுத்தது யார்....

திரைகளுக்கு உள்ளிருந்து புன்னகைக்க....
திரைகளுக்கு வெளியே வெளிச்சம்........

இருட்டில் விளக்கின் ஒளி..
வேம்பின் வாசம்........
ஆலமரத்தின் பிரமிப்பு..
இசையின் மெளனம்.....
வாசம் தரும் பூக்கள்..
இருகிப்போன மென்மை...


கல்லுக்கு கீழும் பூக்கும் பூக்கள்

பதில் கடிதம்

முதலியார்   செளக்கியத்துக்கென்ன ..........அதி  அற்புதம்தான்......   .தள்ளி  நின்று  புன்னகைக்க தெரிந்தவன்  மனதில் என்ன இருக்கும்....  எல்லாவற்றையும்   அப்படியே  ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தை சிக் கெனப்  பிடித்துக்கொள்ள முயன்றுகொண்டே இருக்கிறேன்...... 
வேதனைகளும் வருத்தங்களும் யாருக்குத்தான் இல்லை..... அதை  அடி  ஆழத்தில் புதைத்துவிட்டு  மைய்யமாக  புன்னகைக்க  முயற்சிக்கிறேன் .    இன்னும்  போகவேண்டிய 
தூரம் நிறய.............
சாய்ந்து கொள்ள நினைப்பதே இல்லை.........
முற்றிலுமாக எல்லாவற்றிலிரு்ந்தும்........... எல்லாவற்றிலிருந்தும் தள்ளி நிற்க கற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன்.............. எதுவரை................ தெரியவில்லை

மழை பெய்து சற்றே ஓய்ந்த............. பின் மாலை பொழுது.................

ப்ரியங்களுடன்
த்யாகு........

கடிதம்

எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய எதிர்பக்கம்

what முதலியார் .. எப்பிடி இருக்கீங்க ?

பாலகுமாரன் எழுதிய எதிர் பக்கம் ஞாபகமிருக்கா ? அதை பற்றி பேசி இருக்கோம் . தேடி கிடைக்காமல் விட்டு விட்டோம். எதோ காரணத்தால் அதை படிக்க வேண்டும் என்று பல நாள்  தேடியதில், ஒரு வழியாக படித்து விட்டேன் சமீபத்தில்.  "நானே எனக்கொரு  போதிமரம்"  என்கிற சிறுகதை தொகுப்பில் அந்த கதை உள்ளது. 

எதுக்கு இப்போ சொல்றேன்னா.... போன வாரம் ஆடிடர் ரத்தனை பார்த்தேன். சுமார் மூன்று வருடங்கள் கழித்து. அதை உங்களிடம் கூறிய பொழுது... " ஜென்மம் சாபல்யம் அடஞ்சுதா" னு கேட்டீங்க.  என் ஜென்மம் சாபல்யம் அடையாது. அவ்வளவு தப்பு பண்ணிருக்கேன்.  நடு கூடத்துல படுக்க போட்டு மூக்குல ரெண்டு பஞ்சு  வெச்சு, என்னோட அத்தியாத்த முடிக்கற வரைக்கும் பல ஏமாற்றங்கள, தவறுகள, தவற விட்டது எல்லாத்தையும் சுமந்து தான் ஆகணும்.  அந்த வலி என்னோட இருக்கத்தான் போகுது. அது வேற விஷயம். சொல்ல  வந்தது  என்னன்னா , போனது  எதுவும் திரும்ப வரபோவதில்லை ,  எந்த நினைவும், எந்த சந்தோஷமும், எந்த நிகழ்வும், ஒரு முறை தான் என்கிற பாடம் படித்ததை பற்றி.  மீண்டும் அதை உயிர்பிக்கும் முயற்சி முட்டாள்தனம் என்கிற புரிதல் கிடைத்தது. பின்னோக்கி செல்ல முற்படக்கூடாது. 15 வருஷத்துக்கு  முன் தினம் கடையை அடைத்து விட்டு, வாசல் படிக்கட்டில் அமர்ந்து ரெண்டு கடலை மிட்டாயும் ரெண்டு சிகரெட்டும் காலி செய்து விட்டு, பிரிந்த எத்தனையோ இரவுகளை நினைவிருக்கிறதா ?  அதை இன்று  நினைத்து தான் பார்க்கவேண்டும். மீண்டும் செய்ய முற்பட்டால் செயற்கையாக இருக்கும்.  மாற்றங்கள் தினம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.  மனிதர்கள், சூழ்நிலைகள், எண்ணங்கள், எல்லாமும் மாறி விடுகிறது.சந்தோஷம் கூட கிடைக்கும் காரணங்கள் மாறி விடுகின்றன. அன்று நண்பர்களுடன் வெட்டி அரட்டையில் சந்தோஷம். இன்று அது வேறு விதமாக. நிரந்தரமான சந்தோஷங்கள் நினைவுகள் மட்டுமே. இன்றைய தின-வாழ்க்கையில் அது இல்லை. தொலைந்து விட்டது. அல்லது முட்டாள்தனமாக தொலைத்து விட்டோம். பல  உறவுகள் காணமல் போய் விட்டன. சில உறவுகள் ஏமாற்றி விட்டன. என்னைபோன்ற முட்டாள்கள் அதை மீண்டும் தேடி, இன்றைய வாழ்கையை தொலைக்கிறார்கள். ரத்தனை போன்றவர்கள் வாழ்க்கையில் வென்று புது சந்தோஷங்களை பெறுகிறார்கள்.

இதில் நீங்கள்  எங்கே இருக்குறீர்கள். ?

அன்புடன்
ரமேஷ் ஐயங்கார்
(பெங்களூரிலிருந்து ஒரு சோகமான காலை பொழுதில்)

கலைந்து போன நிஜங்கள்

S.P.NRASHIMMALUNAIDU MEMORIAL HIGH SCHOOL.
சே.பா.நரசிம்மலுனாயுடு நினைவு உயர் நிலைப்பள்ளி.

அன்றைய கோவை நகரில் குறிப்பிடப்பட்ட த்னியார் பள்ளிக்கூடம்
இன்று..........
'
" CAR PARKING AVAILABLE"

வருத்தங்களும்,புன்னகைகளும்...சரி
சமமாக..

சாயங்கால மேகத்தின் வர்ண்ணஜாலங்கள்

இருள் எனபதில் என்ன இருக்கிறதோ

வெளிச்சத்திலும் அதுவே இருக்கிறது

இருந்தது உண்மை;இருப்பதும் உண்மை

இல்லாமல் போனதும் உண்மை

கடந்து செல்லும் காலங்கள் புன்னகைத்தன..

பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
மெல்லப் போனதுவே.........!

Thursday, March 1, 2012

கேட்பதும்... கவனிப்பதும்


அதீத மஞ்சள் வண்ணம் கலந்த
தக தககும் ஆரஞ்சு வண்ண பூப் பந்தாக சூரியன்........ அழகு....

சுடச்சுட ஆவி பரக்கும் 
அண்ணபூர்னா காப்பி....         ....சுவை.... 


புன்னகைத்தேன்.


காலை 7 மணிக்கு என் மகனை பள்ளிக்கு அழைத்து சென்ற போது, சாலையின் இரு மருங்கிலும் நீண்ட வரிசையில், லாரிகள். 


எதுக்கப்பா காத்திருகின்றன இந்த லாரிகள்?

அருகே இருந்த எடை மேடையையும் பக்கத்தில் இருந்த 
இந்திய உணவுக் கழகத்தின் கிடங்கையும் தொடர்பு படுத்தி, 

எடை மேடையைப் பற்றியும் 
இந்திய உணவுக் கழகத்தைப்  பற்றியும்
காலியாக உள்ள லாரியின் எடையைப் பற்றியும் 
எடை ஏற்றப் பட்ட லாரியின் எடையைப் பற்றியும் 
நான் சொல்லிக் கொண்டே போக 
சட்டென்று நகர்ந்து விட்டார்..... கவனிப்பதிலிருந்து.


எப்படி, என்ன இது ........ என்று கவனமாக  கேட்டுதெரிந்த காலம் காணாமல்போயிற்று
பெரும் பாலும் கேட்பது - Hearing -  நிகழ்கிறது.
கவனிப்பது - Listening - இல்லாமல் போயிற்று. 

ஒரு வேளை குறை  நம்மிடமோ.....
இன்னும்  சுவை பட  சொல்லியிருக்கலாமோ....

 போங்கப்பா உங்களுக்கு வேற வேலையில்ல........!

 

இன்று..............


மனதின் வேதனைகள்

தள்ளி நின்று பார்க்க

வலி வலிதான்

என் சுவாசம் உள்ளவரை


புன்னகைப்பேன் எப்போதும்

விட்டு விடுதலை யாக முடியாத போது

கரைந்து போதல் எங்கணம்.


வேடிகை பார்
விலங்குகளை பூட்டிக்கொள்
சுமைகளை தூக்காதே
இறையருளை காண்
அவன் புன்னகைக்க மாட்டான்
நீ சிரி
சத்தம் போட்டு சிரி
வேஷங்களை களை
கண்ணீர் விடாதே
ஒட்டகச் சிவிங்கி
ஓடு...., ஓடாதே....!

பிணம் தூக்கிப்பார்
பணத்தின் அருமை தெரியும்
நீ யாரோ.... நான் யாரோ......!

                                             
                                                                      ஓம்  நமசிவாய