Thursday, December 19, 2013

இந்திரா பார்த்தசாரதி ......... கோவை வருகை.......

கிருஷ்ணன், கிருஷ்ணனாகப் பிறக்கவில்லை ...... உருவாக்கப்பட்டான்.....................
கிருஷ்ணா.......கிருஷ்ணா.... எனும் தன்னுடைய படைப்பின் மூலம்
மஹாபாரத கிருஷ்ணனை சக மனிதனாகப் படைத்து.., வாழ்வின் பல தருணங்களில் நம்முள் எழுந்த பல கேள்விகளுக்கு பதிலளித்த.......... தமிழ் படைப்புலகின் மிக குறிப்பிடத் தக்க படைப்பாளி................
இந்திரா பார்த்தசாரதி அவர்கள். 

 


1980 களில் கல்லூரியை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்த தருணங்களில்..,

 கனவுகள் கலைந்த போது கண் முன்னே நின்றது வேலை இல்லாத்திண்டாட்டம் தான்.
மனதுக்கு ஒத்தடம் கொடுத்தது புத்தகங்கள்.
இருபது வயது வரை தஞ்சைத்தரணியைக் கண்டிராத எனக்கு .,
என் முதல் வாசிப்பில் புழுதி படர்ந்த கிராமத்து மனிதர்களுடன் உறவாடவிட்டு.,கோயில் பிரகாரங்களில் நடக்கவிட்டு ., குளத்தங்கரைகளில் சுவாசிக்கவிட்டு..,காவிரி நதியை கண்களால் பருகவிட்டு.., தூரத்து பச்சைகளையும்., வரப்புகளையும்., வண்டினங்களையும்., பட்சிகளையும் எனக்குள்ளே வண்ணமயமாய் தீட்டி.............,
நான் வாழ்ந்திராத தஞ்சை மண்ணில் பல மாமங்கங்கள் வாழ்ந்த உணர்வை ஊட்டியவர்....தி. ஜானகிராமன் அவர்கள்.

தலை நகர் டெல்லியின் மத்திய தர வாழ்வின் கதவுகளைத் திறந்துவிட்டவர்  ஆதவன் அவர்கள்.
டெல்லிக் குளிரின் வெப்பமூட்டும் அதிகார வர்க்கத்தின் உள் அரங்குகளை மனித மனப்போராட்டங்களுக்கு நடுவே  ”தந்திரபூமி”........
டெல்லி மாநகரின் வெப்பமான வாழ்வின் சூல்நிலைகளை வைத்து பணக்கார ..மேல்தட்டு குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரும்  தனக்குள்ளே  தம்மைப்  புதைத்துக்  கொண்டு ., தனித்தனி   "தீவுகளாக” வாழும் வாழ்க்கை........

அரசியல் களத்தில் அன்றும்., இன்றும் ., என்றும்  பொருந்தக்கூடிய அவதாராங்கள் நிறைந்த .,அரசியல்வாதிகளிடமும்., அதிகாரிகளிடமும் சிறைப்படுத்தப் பட்ட “சுதந்தர பூமி”......

தற்கால சூழ்நிலையில்  நிகழ்கின்ற அரசியல் அவலச் சுவையை அன்றே மாறுபட்ட கோணத்தில் பதியப்பட்ட ”சத்திய சோதனை”.......
அரசியல் சதுரங்கத்தில்...வெட்டியும்., வெட்டப்பட்டும் நிலையாமையில் உலன்று ஆடும்...”மாயமான் வேட்டை”......


அரசியல் கலத்திற்கு ஆண்டவனையும் விட்டு விடவில்லை.. ”.தேவர்வருக” என்று திருமாலையே அரசியல் அவதாரம் எடுக்க வைத்திருந்தார்.......

தன் சுயலாபம் ஒன்றே குறிக்கோளாக எக்கால அரசியலிலும் மிகுந்திருக்கும் அரசியல் வியாபாரிகளை ”வேதபுரத்து வியாபாரிகள்” ஆக குறியீட்டு ஓவியமாக தீட்டியிருக்கிறார்.


அரசியல் அங்கதமாகத் தந்த இந்திரா பார்த்தசாரதி அவர்கள்...
தலைநகர் டெல்லியின் வாழ்வியல் பின்புலத்தில்., அரசியல் அதிகார போதையைத் தாண்டி “திரைகளுக்கு அப்பால்” உள்ள  ஆணாதிக்க சமூகத்தையும் அடையாளப்படுத்தியிறுக்கிறார்....


டெல்லி சமூகத்தில் தைரியமும் கோழைத் தனமும் மிகுந்த மனித மனத்தின் தேடலை “ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன” என சொல்லிச் செல்கிறார்.

சாதரன மனிதர்களின் அசாதாரணமான வாழ்வின் சித்திரங்களை
“அக்னி” யாகவும்....

சமூகத்தின் அங்கமாகிய தனிமனித சமூக உறவில் ஏற்படும் சிக்கல்களையும்., காலமதிப்பீடுகளின் போராட்டங்களையும்....“கால வெள்ளமாக”  “ உச்சி வெய்யிலாக” “வேர்ப்பற்றாக”ப்  பதியவைத்துள்ளார்.

குடும்ப அமைப்பில் ஒவ்வொருவறும் தத்தமது தனித்துவ அமைப்பில் மிகுந்த மனப் போராட்டங்களுடன் கூடிய எரியும் நெருப்பில் “வெந்து தணிந்த காடுகளாக” இருப்பதை ஒவியமாகத் தீட்டியிறுக்கிறார்.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுடன் இந்த மண்ணில் கலைந்து போன கலாச்சாரம் மீறப் படும் பண்பாடு...... இவற்றுனுள் நீச்சலடிக்கும் மனித மனங்களை “நிலமெனும் நல்லாள்” ஆக காட்டியிருக்கிறார்.
புத்தரும் ஏசுவும் காந்தியும் முயன்று தோற்றுப்போன மாற்ற முடியாத மனித சுபாவத்தை “ஆகாசத் தாமரை” யாக பிரதியெடுத்திருக்கிறார்..
தன் வாழ்நாளில் ஐந்து வருடங்கள் போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைகழகத்தில் பணியில் இருந்த போது வல்லரசு நாடுகளின் பிடியில் சிக்கித் தவித்த போலந்து நாட்டின் தனி மனிதனின் உள்ளுணர்வை..... ”ஏசுவின் தோழர்கள்”ல் நளினமாய்.., நாசூக்காய்., நயமாய் சித்தரித்துக் காட்டியுள்ளார்...

போலந்தாக இருந்தால் என்ன.... புதுப்பேட்டையாக இருந்தால் என்ன? மக்கள்., மக்கள்தான்.... பிரச்னை.,பிரச்னைதான்.........என்று மெல்லப் புன்னகைக்கிறார்..

சமூகம்., தொன்மம்., வரலாறு., தழுவலாக்கம்., ஓரங்க நாடகம்., போன்ற தலைப்புகளில் பதினைந்துக்கும் மேற்ப்பட்ட நாடகங்களும்.,நூற்றுக்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளும், எழுதியிருக்கும் இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு........

”ஒளரங்கசீப்., நந்தன் கதை., ராமானுஜர்” போன்ற நாடகங்களும் ”தவம்., மனிதாபிமானம்., ஒரு கப் காப்பி., அவஸ்தைகள்., கன்னி., சொர்க்கத்துக்கு ஒரு குறுக்குவழி.,”  போன்ற சிறுகதைகளும் சிறப்பு பெற்றுதந்தன.......
பத்மஸ்ரீ .சரஸ்வதி சம்மான் , பாரதீய பாஷா பரிஷத், சங்கீத நாடக அகாதெமி விருதுகளை பெற்ற இவருக்கு........... கீழ் வெண்மணி சம்பவத்தை சார்ந்து எழுதிய “குருதிப்புனல்” நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது........
சமூக மேட்டிமை தளத்தில் அதி தீவிர அறிவாளிகளின் கர்வ மோதல்களின் பின்புலத்தில் மலர்ந்த் இ.பா.வின் நாவல்கள் ஆகட்டும்., தஞ்சை தரணியின் சாதாரண கதை மாந்தர்களின் மன களியாட்டங்களில் மலர்ந்த நாவல்கள் ஆகட்டும் ........
தொலைந்ததைத் தேடுகிறார்கள்.... தேடியதைத் தொலைக்கிறார்கள்.....

இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளில் தனித்துவமாக ஜொலிப்பது

"கிருஷ்ணா கிருஷ்ணா"....

 மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை.  இந்நாவலில் உங்களுக்கு திரேதாயுகத்துக் கிருஷ்ணனும் தெரிவான்; 21-ஆம் நூற்றாண்டுக் கிருஷ்ணனும் தெரிவான்.

காலம் கடந்தவன் என்பதால் அல்ல; காலமாகவே நிற்பவன் என்பதால்தான்.

 கிருஷ்ணர் என்கிற பாத்திரம் எந்த ஒரு தனிப்பட்ட ஆசிரியராலும் படைக்கப்பட்டதல்ல; அது ஒரு சமுதாயக் கனவு என்று இ.பா. சொல்கிறார்.

அந்தக் கனவின் சமகால நீட்சி, கிருஷ்ணா கிருஷ்ணா..........

கிருஷ்ணன், கிருஷ்ணனாகப் பிறக்கவில்லை ...... உருவாக்கப்பட்டான்......................



 ”புது யுகத்தின் புதிய மாறுதல்களின் புற வடிவங்களை விட அக வடிவங்களையும் அதன் ஆழங்களையும் கண்டு தன் எழுத்துக்களில் அபார வெற்றியுடன் கலை உருவாக்கத்தை கொடுக்கிறார் இந்திரா பார்த்தசாரதி......
எதையும் தொழ மறுக்கிற அவருடைய கிண்டலும் தனித்து நிற்கிற போக்கும் அவருடைய வெற்றிக்கு உதவுகின்றன.....”   
                                                                      தி.ஜானகிராமன்
 புது டெல்லி 1971. 



கோவையில்.... இந்திரா பார்த்தசாரதி
2013 க்கான , ஜெயமோகனின் ”விஷ்ணுபுரம்” இல்க்கிய வட்டம் நடத்தும்  இலங்கைத் தமிழ் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு 22.12.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று கோவை  பாப்பநாயக்கன் பாளையம் மணிமேல்நிலை பள்ளி வளாகத்தில் நானி கலையரங்கத்தில் மாலை 5.30 மணிக்கு நிகழவிருக்கும் விழாவில் தலமை உரையாற்ற இந்திரா பார்த்தசாரதி அவர்கள் கோவைக்கு வருகை புரிகிறார்......

Friday, May 3, 2013

மே தினம்........ இன்று விடுமுறை தினம்........


சமதர்ம  சமத்துவ சமுதாயம் படைப்பேன்னு சொன்னீங்களே தோழரே....!

பொன்னுலகம்னு சொன்னானே.....பொன்னுலகம்னு சொன்னானே.....ன்னு.... அருணாசலத்தின் குரல் தான்

காதில் ஒலித்ததுக் கொண்டிருந்தது.....

ஜெயமோகன் எழுதிய  பின்தொடரும் நிழலின் குரல் நூலின் முக்கிய கதாபாத்திரமான  அருணாசலத்தின் குரல் அது.


மின்சாரம் இல்லாமல்  40 டிகிரி வெய்யிலின் வெக்கையில் , தூங்காமல் தூங்கி விழித்தெழுந்து...

சுவைத்த அன்னபூர்ணா காபியின் சுவையுடன் கோவை நகரை வலமிருந்து இடம் வந்தேன்.



முப்பத்தி ஆறு செங்கொடிகள் கொண்ட தோரணம்.., இருபத்தி நான்கு இருக்கைகளில் ..

செங்கொடி சட்டையில் குத்திக்கொண்டு மூன்றே மூன்று பேர் ., கொடி ஏற்ற வரப் போகும் உள்ளுர் 

சங்கத்தலைவருக்காக  காத்திருக்க.....

கண்ணாடி ஏற்றப்பட்டு .., குளிரூட்டப்பட்ட  ஆடி7..,டஸ்ட்டர்.,டொயொட்டா.,ஹோ
ண்டா .,

போர்டு.,மிட்சுபிஸி..,ரொணால்டு போன்ற கார்களுடன் .,நம்மூர் டாட்டா., மாருதிகளும் பறக்கின்றன

ஊட்டிக்கும்.,கொடைக்கானலுக்கும்

...... கிடைத்த ஒரு நாள் விடுமுறையைக் கொண்டாட......

மிச்சமுள்ள செங்கொடித்தோழர்களோ....குடும்
பத்துடன் கறிச் சோறு சாப்பிட்டு குதூகலித்திருந்தனர்.



அடர்த்தி  குறைந்து போன  செங்கொடிக்கூட்டம்.., உழைக்கத்தயங்கும்   தொழிலாளர்  வர்க்கம்.,  எல்லோரும்

தலைவர்களே எனும் உணர்வு., தனியுடமைக் கொள்கையின் மீது படியும்  ஆழ்ந்த பார்வை., ஊரிமைக்காக .,

கோரிக்கை வைக்கும் சங்கச் சடங்குகள்.,சதவீதக்கணக்கில் குறைந்து வரும் அரசியல் எண்ணிக்கைகள்.,........


எப்படி இருந்த கம்யூனிஸம் இப்படி  ஆகிவிட்டது.


எங்கே போகிறது  கம்யூனிஸம் ....?



ஆர் எஸ் புரம் பரியல் கிரவுண்டில் மூன்று மணிக்குத் துவங்கும் ., பல்லாயிரக்கணக்கான செங்கொடித்தோழர்கள்

கலந்து கொள்ளும் ஊர்வலம்   ...... சொல்லிவைத்த நேரத்தில் மிகச் சரியாக மாலை ஆறு மணிக்கு வ.ஊ. சிதம்பரம்

பூங்காமைதானத்தை சென்று அடையும்..!

பிரச்சார இசை நிகழ்ச்சிக்குப்பின் உள்ளூர் தலைவர்களும்  .,வெளியூர் தலைவர்களும் .,

மாநில மத்திய சிறப்புத் தலைவர்களும் உச்சகட்டமாய்  நல்லிரவு வரை முழங்குவார்கள் .


சிவப்புச் சித்தாந்த பிரசுரங்கள் விலை போகும். உறவின் அப்பாற்பட்டு .,தோழர்களுக்குள் தோழமை பெருகும்.......!

நூற்பாலை தொழிலாளர் சங்கமாகட்டும்., பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்கமாகட்டும்... தங்களுக்குள் கலந்து

பேசி .,கட்சி உறுப்பினர்கள் மூலமாக தலமைக்கு கொண்டு சென்று...ஒத்துழைத்தோ ., ஒத்துழையாமலோ..,

போராடியோ  தங்களது கோரிக்கைகளுக்கு வலு சேர்த்து ஊரிமைகளை நிலை நாட்டிக்கொள்வதில்

மிகுந்த ஒற்றுமை இருக்கும்.


இன்றோ....அங்கொன்றும் ,இங்கொன்றுமாக  மேதினக் கொண்டாட்டங்கள்.

இவற்றுக்கு  நடுவே ...முத்துக்களைத் தேடித் தேடி .,செம்மைச் சித்தாந்த கடலில் மூழ்கி மூழ்கி........

தோழரே.. தோழரே என்று வாஞ்சையுடன் அழைத்துக் கொண்டு........

முழுநேரத்தொண்டனாக உலா வரும் தோழர்களும் பொருளாதாரத் தேவையின்

பொருட்டு மாற்றத்திற்கு ஆட்பட்டு இருக்கிறார்கள்.

  

மே தினம்... உழைப்பவர் வாழ்வின் சீதனம்.....

உத்வேகம் கொடுக்கும் இசையுடன் கூடிய பாடல் வரி....!

சீதனம்.......உழைப்பவர் வாழ்வின்   மூலதனமாகப் போயிற்றா....?


பொது உடமையின் ... பார்வைகள்   தனியுடமையின் மீது படி்ந்து  விட்டதா....?



உங்களுக்கு தெரியுமா.........!

18 ஆம் நூற்றாண்டின் முடிவிலும்., 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும்....இங்கிலாந்து ., ரஷ்யா.,பிரான்ஸ்., அமெரிக்கா.,

ஆஸ்திரேலியா.... போன்ற உலக நாடுகள் எங்கிலும் தொழிலாளர்கள் மத்தியில் அடக்கு முறைக்கு எதிரான புரட்சிகள் வெடித்தது.


 அனைத்து நாடுகளிலும் மே தினம்

1889 ஜூலை 14  அன்று  பாரிஸில்  சோசலிசத்  தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது.

18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.  பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட

 இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும்,

 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல்

விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக,

மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.





மே தினம் .....! 1923ம் ஆண்டு முதன் முதலாக சென்னை கடற்கரையில் மே தினம் கொண்டாடி இந்திய வரலாற் றில்

என்றும் அழியாத புகழ் முத்திரையைப் பதித்தவர் பொதுவுடமை வாதியும்.,சீர்திருத்தவாதியுமான மா.சிங்காரவேலர்.






--
Thiagarajan.....


Friday, January 18, 2013

கம்பாநதி.............வண்ணநிலவன்






வண்ணநிலவனின் கம்பா நதியின் கதாபாத்திரங்கள்  , . ராட்டை நூலினால் அடர்த்தியாக நெய்யப்பட்ட காடா  துணி போன்று .. பாளையங்கோட்டையின் எந்த குறுக்குத்  தெருவில்  சென்றாலும்., உறவின் முறையிலோ., நட்பின் முறையிலோ ஜாதிய விழுமியங்களுடன் ஒருவருடன் ஒருவர் இணைந்தும் பிணைந்தும் இருக்கின்றனர்.

ராட்டை நூலின் பிசிறுகள் போல் வறுமை என்பது ., கதை மாந்தர்களின் வாழ்வில் ஒட்டியே உறவாடி வருகின்றது. நித்தமும் வாழ்வின் விடி வெள்ளிக்காக முயற்சியுடன் கூடிய கனவைக் காண்கிறார்கள். வேலை இல்லாத்திண்டாட்டமும் ., வறுமையும்..இடம் பெயர்தல் மூலம் மெல்ல மெல்ல மாறிக்கொண்டே இருக்கிறது.

ஊரின் சுகவாசத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர்களோ..மது,மாது மற்றும் சூதில் திளைத்து பிறப்பின் பயனை சுகிக்கிறார்கள்... குற்ற உணர்வு இன்றி. நட்பின் தொட்ர்ச்சியாக மலரும் காதல் , வாழ்வின் தோழமையாக விரும்பும் கணத்திலேயே ,ஜனனத்தில் மரணம் என்பது போல்,வறுமையின் சூழலில் கரைந்து போகின்றது.

வெள்ளைக் காடாத் துணியில் ஒற்றை கலர் நூல் கலந்தது போல.., நட்பு மற்றும் உறவின் தோழமை , ஜாதி மதங்களைக் கடந்து  இயல்பாய் இழைந்து கொள்கிறது.

அனுபவங்களின் ஞாபகமாக..வாழ்வின் துணை நிற்கும் இயற்கையின் கொடை... .இரகசியங்களை தன்னுள் புதைத்துக் கொள்ளாமல் தன் போக்கில் அடித்துச் செல்லும்..தாமிரபரணி ஆறு.., அதன் படித்துறைகள். மிக இயல்பாய் காட்சிப் பொருள் ஆகின்றன.

இதன் ஊடே ., கம்பாநதிக்கரை  மாந்தர்கள் ., தம்மை தமக்குள் தொலைத்துக் கொண்டு..தொலைத்த இடத்திலேயே தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
தேடலின் வசீகரத்தை உணர்ந்து கொள்ளாமல் .வாழ்க்கையை அதன் போக்கில் தள்ளிச் செல்கிறார்கள்.

விட்டு விலகிச் சென்றவர்களோ., தத்தம் வேர்களைத் தொலைத்துவிட்டு., கனவுகளை நிலை நிறுத்திக் கொள்ள மாய மான் வேட்டை ஆடுகிறார்க்ள்.அவர்களுக்குள் வெற்றி தோல்வி சகஜமகப் போய்விடுகிறது.

எல்லாவற்றையும் கண்டு கொண்ட.,கானல் நீராய்ப் போய்விட்ட கம்பா நதி எனும் வாழ்வின் தத்துவம் கதை மாந்தர்களின் வாழ்விழும் நிறைந்தும்., மலர்ந்தும்.,வறண்டும்... தன் வழித்தடத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறது......... எதைத்தேடி....?