Wednesday, June 20, 2012

திருமண வரவேற்பு




கண்ணின் மணி சுருங்கி விரிந்தபோது......பூஞ்சிரிப்பு  பூத்து மலர்ந்தது........
திருமண வரவேற்பில் நின்று இருந்த மணப்பெண்ணின் தந்தையார் முகத்தில்......!

மணப்பெண்ணின் தாயாரின் முகமோ....மகிழ்ச்சியின் மகிழ்ச்சியாக இருந்தது அவர்களின் வரவேற்பில்...ஓரு தனித்துவம்....மேடைக்குச் சென்று தன் மகளை ஆசிர்வதித்து..பின் விருந்துண்டு ....மீண்டும் காலை முகூர்த்ததில் கலந்து கொண்டு அட்சதை தூவி வாழ்த்துங்கள் என்று பிரியத்துடன் வரவேற்றார்.

வரவேற்பிற்க்கு சற்று அருகே ..,சின்னஞ்சிறு கூட்டத்திற்கு நடுவே......

மிருதங்கமும்..,கடமும்.. தனி ஆவர்த்தனம் செய்ய..வயலின் வெறுமனே இருக்க., தேமே என்று கண்களை உருட்டிக்கொண்டு இருந்தார்......பிரபல கர்னாடக இசைப் பாடகி திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள்.

தனி ஆவர்த்தனம் முடியும் தருவாயில் வயலினுடன் சேர்ந்து “தாயே யசோதா”வை மீண்டும் இரட்டை வரிகளில் அழைத்து சிரியதாக கைதட்டல் பெற்றார். தொடர்ந்து சின்னஞ்சிறு கிளியே...,தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற வழக்கமான உருப்படிகளுக்கு நடுவே மணமக்கள் வீட்டாரின் சால்வை போர்த்தும் நிகழ்வை ஏற்றுக்கொண்டு
நாழியைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே..சட்டென்று முடித்துக் கொண்டார் கச்சேரியை.



மேடையில்.,மணமக்களைச் சந்தித்தபோது...சந்தோசம் பொங்கும் குரலில் ”அங்கிள்”என மகிழ்வுடன் அழைத்து எங்கள் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். வாஞ்சையுடன் வாழ்த்துக்கள் சொன்ன தன் தோழி அனிதாவை அரவனைத்துக்கொண்டார். என் மனைவியிடமிருந்து பெற்ற பரிசுப் பொருள் சமையல் கலைப்புத்தகம் என்று அறிந்து “அங்கிள்...இதெல்லாம் என் கணவருக்குதானே....!”என்று சொல்லி சூழ்நிலையை கலகலப்பாக்கினார்..... மணப் பெண்.

அப்புறம் என்ன......கைகளில் தட்டு ஏந்தி ....வேண்டியதையும் வேண்டாததையும் அள்ளிப் போட்டுக்கொண்டு.....நின்ற வாக்கில் கொறித்து உண்டு கொண்டு.....சமையல் கலைஞர்கள்
யாரு...விதவிதமான பதார்த்தங்களின் பெயர் என்ன..? என்று பேசிக்கொண்டே சுற்று முற்றும் பார்த்தால்.....தெரிந்த முகங்களின் புன்னகை நிறைந்திருந்தது.

நிறைவாய்ப்.....புன்னகைத்து விடைபெற்று கிளம்பும் போது...கோவை மாநகரம் கொடுத்து வைத்த மாநகரம்..தெற்கு எல்லையில்  இத்தனை கம்பீரமாய் அமர்ந்து அருள் பாலிக்கும் ஈச்சனாரி விநாயகப்பெருமானைப் பெற்றிருக்கிறதே  ....என்று மனதில் நினைத்து வணங்கிச் சென்றேன்... மாநகர் நோக்கி.

என் திருமதியின் கூந்தலில் சூடியிருந்த முலலை மலர்களின் நறு மணமும் சேர்ந்து..,
தென்மேற்குப் பருவக்காற்றின் குளிர்ந்த தென்றல் எங்களை அனைத்துக் கொண்டது...!

Saturday, June 9, 2012

தமிழ் மகனின்......ஆண் பால்...பெண் பால்....






 

எழுபதுகளில் உச்சத்திலும்.., அதைத் தொடர்ந்து தன் மரணம் வரையில் மட்டும் அல்லாமல்., மரணத்திற்குப்பின் இன்று வரையிலும் கூட.,  குறிப்பிடத்தக்க சதவீத மக்கள் மனதினில் வாழ்ந்துகொண்டு இருக்கும் மிகப் பிரபல்யத்தின் தாக்கத்தின் 

பதிவு இது.

தன்னுள்ளும்., தனைச் சுற்றியும் பிறரை ஈர்க்கும் திறனுடய தனி மனித பண்பை அதீதமாக வளர்த்துக் கொள்வதில் உன்னதமான வெற்றி அடைந்தவர்., திரைஉலகிலும் அரசியலிலும் தன் வெற்றிச் சரிதத்தை நிலை நாட்டியதுபோலவே எழுபதுகளின் உச்சத்தில் இருந்து மக்கள் மனதில் நிலை நாட்டினார்........... அதிலும் குறிப்பாக பெண்கள் மனதில்.........! 


ஊட்டி வளர்க்கபட்டதினாலோ., ஊரிப்போனதினாலோ., தன் மன ஆழத்தின் படிமங்களில் பதியப் பட்ட மிகப் பிரபல்யதின் கரிஷ்மாகதைநாயகியின் வாழ்வியல் பிரச்சனையாக மாறியதை ப்ரியா.,அருண் இருவர் பார்வையிலும் பதியவைத்திருக்கிறார் தமிழ் மகன். 


நாயகியின் உடலியல் நிறமிக்கோளாரான வெண்குஷ்டம்., அவரது மனதில் ஏற்படுத்தும் தாழ்வு மனப்பான்மை மனச்சிதைவுக்கு கொண்டு சென்று உளவியல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

ஒரே பிரச்சனையை பெண்ணின் பார்வையிலும் ஆணின்பார்வையிலும் வடிவமைத்து தான் இங்கே இல்லை என்பதை இருப்பதாக உறுதிப்படுத்துகிறார் தமிழ் மகன்.


1972ல் கண்ணதாசன் இதழில் வெளிவந்த ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு கதையில் சேரிவாழ்  கதாபாத்திரங்களான.,சித்தாள் கம்சலைக்கும்.,ரிக்‌ஷாஓட்டும் செல்லமுத்துவின் குடும்பவாழ்வில் இதேபிரபல்யத்தின் தாக்கம், நேரடியாகத் தாக்கி, பிறழ் காமத்தில் கம்சலையின் வாழ்வினைத் தொலைத்தது.


இதே பிரபல்யத்தின் தாக்கமாக சூத்திரதாரி என்கின்ற எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை உமாவும், எம்.ஜி.ஆர் எனும் கரிஷ்மாவின் மீதான தன் அதீத ரசனையை வெளிப்படுத்துகிறார். ஆனால் தன் வாழ்வினைத் தொலைத்துவிடாமல் தன் அளவில் சுதாரித்துக் கொள்கிறார். ஆனால் வாழ்வின் ஓட்டத்தில் தன்னையும் தொலைத்து.., அதற்கு காரணமானவனோடு சேர்ந்து கரிக்கட்டையாகிப் போகிறார் மணல் கடிகை உமா.


தமிழ்மகனின் ஆண்பால் பெண்பால் கதாப்பாத்திரமான ப்ரியாவின் வாழ்விலோ...மனப் பிறழ் காமம் ., உளவியல் ரீதியாக ப்ரியாவின் வாழ்வினைத்தொலைத்தது.

ப்ரியா.,கம்சலை இருவர் வாழ்விலும்.,அனர்த்தங்கள் மலர்ந்து ., 

தாமே தம்மிடமிருந்து தொலைந்துபோகக் காரணமானது..., எம்.ஜி.ஆர்.......எனும் மிகப் பிரபல்யத்தின்....கரிஷ்மா”இரண்டிலுமே.,

பெண்மை பரிதாபமாக அடிபட.,ஆண்மை அரவணைத்துக் கொள்கிறது..........






Wednesday, June 6, 2012

பருவகாற்றின் முதல் துளி.........

கதம்பம் .............!


 பருவகாற்றின் முதல் துளி.........  
வெக்கைக்கு இன்னும் விடைகொடுக்கவில்லை .,
அதிகாலையின் இளந்தென்றல்.சற்றே தாமதமாக துவங்கிய பருவக்காற்றின் மழை மேகங்கள்.,பிரம்ம முகூர்த்தத்தில்.,
தெருவெங்கும் தெளித்திருந்தன மழைத்துளிகளை.

காலை நேரத்து நடைப் பயணத்தில்.,தன் மேல் விழுந்த மழைத்துளியின் வேகத்தில் பட்டுத்
தெறித்த தெருப் புழுதிகள்.,உருண்டு ஓடியிருந்தன .........பொருமலாக....
என் கீழ் உதட்டின் மேல் பட்டுத்தெரித்த முதல் மழைத்துளியைச் சுவைத்தேன்.
’ஜில்’ என்று இருந்தது என் புன்னகை.


புன்னகை என்றதும்       நினைவில் வந்தது  மணமக்கள் நின்று இருக்கும் திருமணவரவேற்பு
’ப்ளெக்ஸ் பேனர்’     
பெரும்பாலும் ......இவர்தானா..இவர்தானா எனும் நினைவினில் மணமகனும்., என்தலையில்
கட்டி வைத்துவிட்டார்களே என்னும் உணர்வில் இருப்பது போல் மணபெண்ணும் ., புன்னகையைத் தொலைத்து விட்டு.......
.ப்ளெக்ஸ் பேனர்’களில்  முகம் காட்டுகிறார்கள் .


இன்னும் பலர் மனதுக்குள்  இருக்கும் சந்தோசத்தை முகத்தில் காட்டத்தெரியாமல் விழிக்கிறார்கள்

புகைப்படத்தில் புன்னகைப்பது ஒரு அற்புதமான கலை..
அதை புரிந்து கொண்டு  இயல்பாய் புன்னகைக்க
முயற்சி செய்யுங்களேன்  மணமக்களே.


அட்லீஸ்ட்   கடைசி முறையாகவேணும்....!