பஞ்சாட்சர மந்திரம் நூலகம் எங்கும் நிறைந்திருக்க......... சுவாசத்தில் சந்தனம் புகையாய் மணக்க..................................................... மார்கழி குளிர் மறையும் நேரத்தில் நூலகத்தில் நண்பர்கள் ஒவ்வொருவராக கூடினர் .
சென்னை சபாக்களிலும் ., பிரத்யேகக் கச்சேரிகளிலும் தேடிச் சென்று சங்கீதத்தின் சங்கதிகளை கேட்டு கேட்டு ., கேள்விஞானத்தில் பரவசப் பட்டவர்.....நணபர் மித்ரன் அவர்கள்.
தான் பிறந்து வளர்ந்த சூழ்நிலையில் ....தாயார் மற்றும் சுற்றத்தவரின்.... அரவணைப்பில்., உற்று நோக்கும் உன்னதத்தில்., உள்வாங்கிக் கொண்ட இசை அறிவை., தம் குழந்தைச் செல்வங்களின் இசை அறிவு வளர்ச்சியின் போது ......தன் தேடலின் நோக்கில் செழுமைப் படுத்திக் கொண்டவர்.... நண்பர்சுரேஷ்.
நூலக உறுப்பினர் நண்பர்...... கும்பகோணத்துக் காவிரிக் கரைக் காரர்....... ஒரு பத்து பன்னிரண்டு ஆண்டுகள் சங்கீதத்துடன்., கட்டிப்புரண்டு விட்டு... வாழ்வின் பொருள் தேடலின் பொருட்டு பங்களூரில் ..., சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியில் சுழன்று கொண்டே... இலக்கியத்தையும்... , இசையையும் அசைபோட்டு ., சுவைத்துக் கொண்டிருக்கும் நண்பர்ஆனந்த்.
பூர்வீகம் மாயவரம் பக்கத்தில்., வளர்ந்தது சென்னை., மருத்துவம் படித்தது தஞ்சாவூர் காவிரிக் கரையில்.... எங்கும் சூழ்ந்து இருக்கும் சங்கீதச் சூழ்நிலையிலிருந்து வந்து ... கோவையின் சுவைமிகு செழுமையில் நிலைத்து நின்று விட்ட...பிரபல மருத்துவர்.... திருமதி. ராதாரமணி அவர்கள்
ஷாபிரதர்ஸ்.....என்று நன்கு அறியப்பட்ட... நண்பர்பரேஷ்அவர்கள் சூழ்ந்து இருக்க
இந்த நூலகத்தின் செல்லக்குட்டி........திருமதி.அனிதாஜோதீஸ்குமார்.... அவர்கள் எரியும் மெழுகுவர்த்தியுடன் வந்த கேக்கை.., கிறுஸ்துமஸ் வாழ்த்துக்களுடனும்., கை தட்டல்களுடனும்., மிகுந்த சந்தோஷங்களுடனும்......, ஊதி அணைத்து., வெட்டிப் பகிர்ந்து .....அனைவருக்கும் வழங்கினார்.
மொறுமொறு உழுந்து வடையும் ... ப்ரூ காபியும் சுவைத்த பின்னர்.... இசை என்னும் சுவையை செவிகளும் ருசிக்க ஆரம்பித்தன. எடுத்த எடுப்பில் ....... கண்ணா.... கிருஷ்ணா....பால கோபாலா.... உன்னை உள் வாங்கி..., உன் சகலத்திலும் உன்னை உணர முற்பட்டு .., ஒப்புவமை இல்லாத.. கருணைக் கடலான..... திரு வேங்கடவா.....ஹரிஹரா...... நாராயணா....... என தன்னிலிருந்து தானாக கரைந்து போகும் உணர்வை ஏற்படுத்தும்........... அன்னமாச்சாரியாரின் கீர்த்தனையான ”பாவயாமி கோபால பாலம்....மன சேவிதம்” என சர்வ சாதரணமாக பாட ஆரம்பித்தார் நண்பர் ஆனந்த். சுருதிபெட்டி இல்லை; வயலின் இல்லை; கடம் இல்லை; தம்பூரா இல்லை......... குரல் வளத்தின் இனிமையில் அனைவரையும்... பாலகோபலனை உணரச் செய்தார் ஆனந்த். குஜராத்தியில் பேசி, ஆங்கிலத்தில் படித்து யோசித்து., தமிழ் புரிந்து பேசும் பரேஷ் ., சொக்கிப் போய் அமர்ந்திருந்தார். வேதமாகிய ராமநாமத்தை சரணத்தின் நடுவில் ஆரம்பித்து ..... சின்னதா ஒரு ஆலபனை செய்து......... பல்லவியின் துவக்க வரியான “ராம நாமம் ஒரு வேதமே.......!” என்று கை தட்டல்களுக்கு இடையே முடித்தார் ஆனந்த். அப்புறம் .....என்ன....! சுரேஷும்.. ஆனந்தும் திரை இசைப் பாடல்களில் புகுந்து விளையாடினார்கள். அதுவும் ..சுரேஷ்...மிமிக்கிரி எபெக்ட்டை நடுவில .. நடுவில கொடுத்து., தனக்கே உரித்தான முகபாவத்தோடு
ரசிகத்தன்மையோடு வெளிப்படுத்தினார். இளைய ராஜாவின் திரை இசையைத் தொட்டு விட்டு..... பி,பீ.ஸ்ரீநிவாஸ்....டி.எம்.எஸ்......எம்.எஸ்.வி...கே.வி.மகாதேவன்...... கூட்டணியில் மலர்ந்த எண்ணற்ற பாடல்களில் சிலவற்றை அவர்கள் இருவரும் பாட........ கச்சேரி களை கட்டியது..... கண் மையேந்தும் விழியாட.... தோள் கண்டேன்... தோளே கண்டேன்... மெளனமே.. பார்வையால் ஒரு பாட்டு பாடவேண்டும்... நிலவே என்னிடம் மயங்காதே.... உருகி உருகி பாடி பரவசப் படுத்தினார்கள். சங்கதிகளை அடையாளப் படுத்தினார்கள் . ஏன் சிரித்தாய் என்னைப்
பார்த்து.....என்ற பாடலின் பொடி..பொடி சங்கதிகளின் இசை இன்பத்தை
எங்களுடன் பகிர்ந்து கொண்டார் ...நண்பர் சுரேஷ்’ சின்ன சின்ன கண்ணனுக்கு... என்னதான் புன்னகையோ........ என்று புன்னகைத்து பாடிக்கொண்டு இருந்த போது “க்ரை” அமைப்பின் சார்பில் வந்திருந்த பிரதிநிதிகள் இருவர் ., அந்தப் புன்னகையில் மெய் மறந்து நின்று இருந்தார்கள். அதிலும் அந்தப் பெண் பிரதிநிதியின் முகத்தில் நிறைவான சந்தோஷம். சங்கதிகள் நிறைந்த வாழ்வின் இந்த நிமிடங்கள் இனிமையாக இருந்தது. ”ஹேப்பி....கிறுஸ்மஸ்”
அந்த நற்சந்தியில் தமிழ் நாடு மின்சார வாரிய டிரான்ஸ்பார்மரை
ஒட்டி பூவரச மர நிழலில் ..., ஓங்கிய அரிவாளுடன்., முருக்கு மீசையுடன்.,
தலையில் உருமாக் கட்டுடன்., உலக்கை., வேல்கம்பு.,சலங்கையுடன்......மிகுந்த
வீரத்துடன் .... சாந்த முகத்துடன்., குதிரை வாகனத்துடன்.., எழுந்தருளி
அருள் புரிந்து கொண்டிருந்தார் அழகிய சங்கிலிக் கருப்பன்.
அம்மாவாசை.,பெளர்ணமி
மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்தில் ஜொலிப்பார் சங்கிலிக்
கருப்பன்ன சாமி.! உளவியல் சார்ந்த மன அமைதிக்கும்., பாதுகப்பிற்கும்....
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு... தன்னம்பிக்கையின் ஊற்றுக்கண்ணாய்
விளங்குபவர் சங்கிலிக் கருப்பன்ன சாமி....!
எட்டி எட்டிப் பார்த்தேன்......! சங்கிலிக் க்ருப்பனாரின்
அருள் புன்னகை ....துளி கூட எனக்குக் கிடைக்கவில்லை......! முச்சூட்டையும்
அந்தப் பெண்மணியே எடுத்துக் கொண்டார்.
மீண்டும்..
இந்தவாரம் வெள்ளிக்கிழமை., சற்று தொலைவிலேயே போக்குவரத்துச் சிக்கலில்
மாட்டிக்கொண்டு., மெள்ள சங்கிலிக்கருப்பன் கோவிலுக்கு ஊர்ந்து ., ஊர்ந்து
வருவதற்குள்., சென்ற வாரம் நான் சந்தித்த பெண்மணி ., தன் பக்தியை சென்ற
வாரம் போலவே சமர்ப்பித்துவிட்டு ..., சற்றே நகர்ந்து சென்று விட்டார்.
என் முறை வந்தது . சங்கிலிக் கருப்பனை தரிசிக்க கோவிலினுள் எட்டிப் பார்க்க......
........ பகீரென்றது...!
“சங்கிலிக் கருப்பனைக் காணவில்லை”
சுற்றுமுற்றும் பார்த்தேன்... பக்தி வெள்ளத்தில் தான் உருகி......தன்
பாசத்தாலும் ., நேசத்தாலும் ., ப்ரியத்தாலும்., அதீத அன்பாலும்.,ஆட்கொண்ட
அந்தப் பெண்மணியின் இடுப்பில் சங்கிலிக்கருப்பனார் அமர்ந்திருக்க..அந்தப்
பெண்மணி தன் வழியே சென்று கொண்டிருந்தார் அமைதியாக....!
வசந்த பஞ்சமி இசை விழா............ காட்சி ஒன்று....
”..............T.M.கிருஷ்ணாவின் கச்சேரி காலை 6.45 மணிக்கு......ராம் நகர் ராமர் கோயில்ல.... நீங்களும் வர்ரீங்க.....” ன்னு எனை இழுத்துச் சென்றார்.........எங்க வீட்டு அம்மிணி.
"ராம்நகர் ராமர்கோயில்" கோயம்புத்தூர்.......
மஞ்சள் பூ மாலையில் சீதாராமனையும் லட்சுமணனையும்., தரிசித்துவிட்டு.....அரங்கினுள் நுழையும் போது.,
கீர்த்தனையை., சிறிய ஆலாபனையோடு முடித்துவிட்டு கை தட்டல் வாங்கிக்கொண்டிருந்தார் T.M..கிருஷ்ணா...!
அதுவும் எப்படி.? வெண்மையில் இத்தனை நிறங்களா...! எனக் கேள்வி கேட்கும் வகையில்....
பசு வெண்ணெய்யின் வெண்மை. எருமை வெண்ணெய்யின் வெண்மை. ரகத்திற்கு ஒன்றாக ஒரு நாள் புளித்த., இரு நாள் புளித்த , மூன்று நாள் புளித்த வெண்ணெய்யில் மஞ்சள் மலர்ந்திருக்குமே........ அப்படியான மஞ்சள் வெண்மையிலும் பெண்கள்.
கூந்தல்பெரும்பாலும் குறைந்து விட ..., புடவையில் படோடோபம் மிளிர்ந்தது.
புன்னகைக்குப்
புன்னகை., புன் சிரிப்புக்குப் புன்சிரிப்பு., சிரிப்புக்குச்
சிரிப்பு., கண் அசைவு அங்கிகாரத்துக்கு..அங்கிகாரம்.,
.....எல்லாவற்றிலும் பட்டுத்தெரித்தாற் போன்ற அதிர்வுகள் மிளிர்ந்தது.......அகங்கார அழகியலாக.......!
பதவி நிறைவு பெற்று வந்த பெரும்பான்மை ஆண்கள் மத்தியில் அதே கம்பீரம்..
மருத்துவர்கள்., ஆடிட்டர்கள்., மற்றும் ஒன்றிரண்டு வியாபார உலகில் கோலோச்சியவர்கள்........, தத்தம் மனைவியர்களுக்கு அருகே தேமே என்று அமர்ந்திருந்தார்கள்
”நான் I.T. Coridor ஆக்கும்” என சொல்லாமல் சொல்லிய இளம் வட்டங்கள்.,
தம் இளம் மனைவியர் அரங்கத்தின் உள்ளே இருக்க.... ஓர் இடத்தில்நிற்க முடியாமல்
கைத்தொலைபேசியுடன் வராந்தாவின் இரு முனைக்கும் அலையும் MBA.,க்களும் I.T., க்களும் பரபரப்பை முகத்தில் மட்டுமல்ல ... உடல் அசைவு மொழிகளிலும் காட்டினார்கள்....
தமிழகத்தில் பிறந்து., வளர்ந்து., அமெரிக்காவில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு., விடுமுறைக்காக கோவைக்கு வந்த உலக பிரகஸ்பதிகள் இளம் தொப்பைகளுடன்...,
தொப்பைகளுக்கு மேலே ஊஞ்சலாடும் நீண்ட கேமிராக்களுடன்
தொப்பை போட்டோகிராபராக இடமிருந்து வலம் வந்தனர்.....
மேடையிலே சுருதிப் பெட்டியுடன் தம்புரா., மிருதங்கம்., வயலின்., வீற்றிருந்தது.... அதன் ஆகிருதியில் கடமும் ., கடம் வாசிப்பவரும் காணாமல் போயிருந்தார்கள்
இவர்களுக்கு மத்தியில் T.M.கிருஷ்ணா மத்தியமான இளமையைத் தாங்கிக்கொண்டிருந்தார் ...
நவநாகரீகத்தின் அடையாளமாக ”ஜீன்ஸ் பேண்ட்” பெண் ; காட்டன் மேலங்கி ; குறுகலான முடி அலங்காரம் ; அழகியலின் முத்தாய்ப்பாய் துளிப் பொட்டு ; கையில் செல்போன் ; கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தாலும் அந்த பெண்ணின் முகத்தில் சாந்தம் தவழும் புன்னகை...
"எனக்கு வெஜிடபிள் பன்னீர் பிஸா போதும் ; தயிர்சாதம் ஒரு கரண்டி போதும் ; இஞ்சிப் புளி ஒரு துளி போதும் ; T.M. கிருஷ்ணாவின் இந்த சாகித்திய சங்கீதம் போதும்....." என்று விரும்பியதைத் தேர்ந்தெடுத்து ., போதும் என்ற அளவில் நிறைவைத்தறும் முகம்.
பேக்கு மாதிரி மூலையில் உட்கார வைத்துவிட்டார்கள்.....வாதாபி கணபதியை...! எத்தனை தடவை... எல்லா கச்சேரிகளிலும் கேட்டாச்சு.
”மற்றும் ஒரு நிகழ்வு” எனும் உணர்வில் சோபையின்றி கைதட்டல்.
சூர்யதாஸர்-பார்வையற்றவர் இயற்றிய கீர்த்தனையை
T.M. கிருஷ்ணா ஆரம்பிக்க...... கூட்டம் செவிமடுக்க....ஸ்வர ஆலாபனையை சற்று எறக்குறைய ஆறு நிமிடங்கள் நடத்த.,
தொடர்ந்து வயலினுக்கும் ஐந்து நிமிடங்கள் தந்துவிட......
கீர்த்தனை முடிவில் சஞ்சாரத்தில் சிறிதான ஆர்ப்பரிப்பு....!
அது முடிந்து “ஏ...கோபாலா.....ஏ.... கோவிந்தா...” எனக் கூப்பிடும்போது...நேரம் சரியாக காலை எட்டு மணி..
கை தட்டலுடன் பல ஜனங்கள்., காலை உணவிற்கும் ., பிரெஷர் மற்றும் சர்க்கரை வியாதி மாத்திரைகளுக்கும்..,
”கிளினிக்” திறக்கப்போகும் அவசரத்துக்கும்.., ”புருஷன் போனால் பொண்டாட்டியும் போகணும் “ என்ற கட்டுப் பாட்டுக்கும்
ஏற்ப “சட்...சட்...” என்று கூட்டத்தின் ஒரு பகுதியினர் எழுந்து புறப்பட்டார்கள்.
”கண்கள் இருக்கும் போதே சிதம்பரநாதனை காண வேண்டாமோ.....!” என்று T.M.கிருஷ்ணாகேட்டபோது.,
பிரபல மருத்துவரின் பின்னால் கிளம்பிச் சென்ற மருத்துவரின் மனைவி.....
அவரும் மருத்துவர்தான்......
“அட தமிழ்ப் பாட்டு .... இதைக் கேட்டுட்டு வந்துடறனே....” என்று கொஞ்சலுடன் கெஞ்ச ..., பிரபல மருத்துவர் புன்சிரிப்பைக் கொட்டாமல் ”சரி” என வெளியே நகர்ந்தார்.
கணவர் வெளியே செல்வதற்கு முன்பு., கணவருடன் அமர்ந்திருந்த மருத்துவ மனைவி ரசிகத் தன்மையில்.,அமைதியின்., அடக்கத்தின் சொரூபமாக அமர்ந்திருந்தார்.
”ஆஹா...பேஷ்..பேஷ் ..என்ன ஒரு தனி ஆவர்த்தனம்.”தன் தனிமையில்., அந்த மருத்துவ மனைவியின் ரசிகத்தன்மையில்....எத்தனை எத்தனை உற்சாகம்; உத்வேகம் ; கூடவே பாட..., முகம் முழுவதும்.. அபிநயம் களைகட்ட... விரல்களில் தாளம் லயமிட...பரவசத்தை அள்ளிப்பருகிய திருப்தி... அவர் முகத்தில்.பக்கத்தில் உற்சாகமாய் இரு தோழியர் வேறு.
மீண்டும் திரும்பி வந்த பிரபல மருத்துவர் “என் செல்போன்..” என்று வினவ., அவரது மருத்துவ மனைவியின் முகமாற்றம் அவ்வளவு அருகில் அதிர்ச்சி அடைய வைத்தது.
பொங்கி வரும் பாலில் ஒரு டம்ளர் தண்ணீரை ஒட்டு மொத்தமாக கொட்டியது போல ”புஸ்ஸ்” எனப்போயிற்று.
பிரபல மருத்துவர் அரங்கத்தை விட்டு மீண்டும் அகன்ற போது மருத்துவ மனைவி.,
விட்ட இடத்தில் இருந்து பற்றிக்கொண்டார் தன் சந்தோஷமான ரசனையை..!
மூக்கில் ஒற்றை வைரக்கல் மூக்குத்தி தன் அளவில் மினுமினுத்துக்கொண்டே இருந்தது.
....”ஸீ..த்ரூ” ஆடையை பெண்கள்தான் அணிய வேண்டுமா..?
6.2 உயரத்தில் ”ஸீ..த்ரூ” ஆடையில் ஒருவர் மல்லுவேட்டி மைனர் கணக்காக., இழுத்துக்கட்டிய வேட்டியின் மேல் மிகநீண்ட வண்ணக்குர்தாவைப் போட்டுக்கொண்டு.,
இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருந்தார்.
பின் தங்கிய பெருசுகள் கடைசிவரை மிகப் பரிதாபமாக அமர்ந்திருந்தார்கள்.,
அவ்வப்போது தலை ஆட்டியவாறு.
டி.எம். கிருஷ்ணா... ராகவேந்திரர் கீர்த்தனையுடன் தம் கச்சேரியை முடித்துக்கொள்ள...
வாங்கிக்கொண்டு வெளியே வந்தால்...10..,20.,30., லட்சம் மதிப்புள்ள கார்களின் ஒட்டுனர்கள்
வெள்ளை உடையில் பின்கை கட்டி வழி மீது விழி வைத்துக் காத்து இருந்தனர் தங்கள்
எஜமானருக்காக.வசந்தத்தின் இசை இன்பம் அவர்களது செவிகளை எட்டவில்லை.
அவர்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர்.படப் பாடலோ.,சிவாஜி படப்பாடலோ ...டி.எம்.எஸ்.,பி.பி.எஸ்.,எஸ்.
பி.பி...குரலில் போதும்... கடைசிக்கு ஒரு கொலை வெறி பாட்டு கூட அவர்களைப் புன்னகைக்க வைக்கும்.
............இசை என்பது எங்கும் பரவிக்கிடக்கிறது.........
வசந்த பஞ்சமி இசை விழா............ காட்சி இரண்டு.
மரங்கள் சூழ்ந்த வெட்டவெளிப் பிரதேசத்தில்.., தாவரவியல் பூங்காவில் ., வசந்தபஞ்சமியின் இரண்டாம் நிகழ்வாக
அருணாசாய்ராமின் இசைக்கச்சேரி காலை பத்து மணிக்குத் துவங்கியது.
கொத்துமல்லித்தலையும், எண்ணெய் பளபளப்பில் கருவேப்பிலையும்,
கொத்து கொத்தாய் சுவை
மணக்கும் ......புதினா....... இலை
வகைகள் ஒரு புறம்.
நாட்டுக் காய்கறிகள் எனும் தலைப்பில்.........கத்திரிக்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய்,
பூசனிக்காய், அரசானிக்காய், முருங்கைக்காய்....என காய்கறி வகைகள் ஒரு புறம்.
தண்டும், முருங்கக்கீரையும், தேங்காயும்.... தனி ஆவர்த்தனமாய், தனியே ஒரு புறம்.
தமிழருக்கு தனி முகம்.. அதுவும் மலைவாழ் தமிழருக்கு தனித்தமிழ்
சாம்பல் பூத்து வெளுத்த முகம்...... கறுப்பும் வெளுப்பும் என எந்த நிறமானாலும்..........
கோசும் ,காலி ப்ளவரும்
வாசம் வீச..
குண்டு குண்டு
உருளைக்கிழங்கு..
தூத்துக்குடிமாவட்டம்
எட்டையபுரம் தாலுக்கா..,
உருளைக்குடி கிராமத்து ஜனங்களுக்கு , நீலகிரி மலையில் விளைந்த குண்டு
குண்டு உருளைக்கிழங்கு எட்டியிருக்குமா..? எனும் சந்தேகம் எனக்குள் புன்னகைத்தது.
ஆமாம்... உருளைக்குடி என்ற பெயர் எப்படி வந்தது...?
காரணப்பெயரா...இடுபெயரா....? என்னும் கேள்வியுடன்
திரும்பினால் என்னைக் கவனி என்று பச்சைநிறம் கண்சிமிட்டியது.
கொட்டிக் குவிந்து கிடந்தன பீன்ஸும் பட்டாணியும்.
கடித்துச் சுவைத்திட கேரட்......,
அங்கும் இங்கும் எங்கும் சுத்தமான சிவப்பில்
நாட்டுத்தக்காளியும்..,
ஆப்பிள் தக்காளியும்...,
அதுவும் இரண்டு ரூபாய்
வித்தியாசத்தில்...
ஒரே ஒரு இடத்தில் கருணையோடு கருணைக்கிழங்கு.
சிறு குவியலாக பப்பாளிக் காய்களும் ,பழங்களும்..,
தாகசாந்தி செய்திட இளநீர்க் கடையும் இருந்தது.
குண்டு மிளகாயும்.., பச்சை மிளகாயும் எனைப் பார்க்க..,
நீட்ட மிளகாய் வருத்து எடுத்து விட்டது வரமிளகாயாக...
அதுவும் மிகுந்த காரத்துடன்.
” நம்மூர் பக்கமிருந்து வந்த ,தெரிந்த முகமான கடைக்காரராக
இருந்தால் , ஒரே கடையில் பை நிறம்பி சுமை ஏறி விடும்.”
தேடித்தேடி, விரும்பி வாங்க வேண்டிய காய்கறிகளுக்காக
அங்கும் இங்கும் ஆர்வத்தை சிந்தும் என் மனைவியைப் பார்த்தவாறே ஆங்காங்கே காத்திருந்தேன்.
காம்பை உடைச்சு வெண்டைக்காயைத் தேடாதே...! எனும் சப்தம்
ஒரு புறம்....,ஒரு ரூபா கூட கம்மி இல்லை..என்று எறிந்துவிழும் சப்தம் ஒரு புறம்..,
மொத்தம் ஒன்பது ரூபா.,
ஆனாலும் கூசாம பத்து ரூபான்னு கேட்பது ஒரு புறம்...!
” கண்ணு...! தோட்டத்திலேயே முப்பது ரூபா கண்ணு...இங்க இருபத்துஎட்டு
ரூபான்னு முடிவு செஞ்சுட்டாங்க.... என்ன கண்ணு பன்றது “ன்னு.. சிரிச்சுகிட்டே நஷ்டக்கணக்கு
சொல்வதும்.., கேட்பதும்.. மற்றும் ஒரு புறம்.
இனிமையான குளிர் நிறைந்த காலை நேரம்..,வெயிலின்
சுரம் இன்னும் ஏறவில்லை. வெளிச்சம் மட்டும் இளம் தென்றலுடன்
உடலை வருடியது .
கிராமத்து மனிதர்களே வியாபாரிகளாக மாறிப்போய், காசுபார்க்கும்
கனாகாலத்தில், சற்றே எரிச்சல்... அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒலிக்க... பெரும்பாலும் நம்பிக்கைச்
சிரிப்புடன் மென்மையாகத்தான் இருந்தார்கள்.
”மச்சானுக்கு வாழ்க்கைப் பட்டு, கோழி கூப்பிட எழுந்திருச்சு
வந்து, பட்டறையில் சேத்து வெச்ச வெங்காயத்துக்கு நல்ல விலை வந்து விக்கலாம்ன்னு வந்தா....
ஒரு ரூவா தான் கூடிப்போயிருக்கு...! ஆனாலும் மச்சானோட இம்மாந்தொலைவு வந்துபுட்டோமல்ல...” என்று மனசிலே
புன்னகையோட மச்சானைப் பார்த்து கிட்டே டீ குடிக்கிற இளமையான வெங்காயக்காரம்மா,
ஒடிசலா, ஒய்யாரம நின்னுகிட்டு இருந்தாங்க.
இரண்டரை சைசில உருண்டு திரண்டு
இருக்க, கால் டன் கணக்கிலே குண்டு உடம்பு பிதுங்க, லாவகமா அமர்ந்து வெங்காயத்தை அம்பாரமா
குட்டு சேத்தாம..,
நின்ன வாக்கில, அசமஞ்சமா, அத்தனை பெரிய உடம்பை வளைச்சு,
குனிஞ்சு, வேலை செய்யிற நிலையைப் பார்த்தப்ப “பிரஷர்”ஏறிடுமோன்னு
பதைபதைப்பாய் இருந்தது.
மற்றபடி எங்கும் ஜனங்கள்.... விதவிதமான உணர்வுகளுடன்.
கருப்பிலிருந்து..வெளுத்த மாநிறம்..,நிறைவாய் கட்டிய
நூல் புடவை.., இயல்பான முகம்..,தம்மை யாரோ கவனிக்கிறார்கள் எனும் நினைப்பில் ஆடிவரும்
நடையழகு.. ஒரு கையில் பைநிறைய சுமை.., அதனால் நடையில் ஆட்டம்.., வலமிருந்து இடம் செல்லும்
வரை பார்த்து நின்றேன்.
பரபரப்புடன் கணவன் தேர்ந்தெடுக்கும் எந்த காய்கறிகளையும்
வேண்டாம் வேண்டாமென சொல்லி,
தன் தேடலின் காய்கறிகளை மட்டும் மனைவி எடுத்துக் கொடுக்க,
அதை வாங்கி போட்ட கணவன் முகத்தில் கவனம் செலுத்தினேன்..... மீண்டும் புன்னகைப் பூக்கள்
கண்சிமிட்டின.....!
பொண்டாட்டி சொன்னதெல்லாம் வாங்கிட்டேனே..!வேற ஏதாவது
மறந்துட்டனோ..!ன்னு தனியே தன்னந்தனியே , சுவாசித்துக்கொண்டே யோசிக்கும் தனிக்கணவனின்
மனைவியின் முகம் நிழலாக வந்து சென்றது. மகராசி என்ன பாடு படுத்தினாளோ..!
தன் உயர் அதிகாரிகளுக்கு சேவகம் செய்து பழக்கப்பட்ட கணவனின் மனைவி, கணவனைவிட ஒரு புள்ளி உயரமாகவும்., கம்பீரமாகவும்
நடக்க.,அதிகாரத்துக்கு அடிமைப்பட்ட கணவனின் கைகளில் இருபைகள்....உதிரியாக கை இடுக்கிலும்
ஒன்று.
You pay…one rupee extra… you get…one rupee less…வட இந்திய வழி வந்த கணவன்மார்கள் ரூபாக் கணக்கு பார்த்துக்கொண்டே,கைக்கு
அடக்கமான பைகளுடன் சந்தையில் , காசுக்கணக்குப் பற்றி தோழர்களுடன் பேசியவாரே உலா வந்தனர்.
அவர்கள் மேல் பார்வை பட்டுத்தவழ்ந்தது.
குதிரை வால் கொண்டையுடனும்.,வளைவுகளுடனும் .,
நிமிர்ந்த
நடையுடனும் ,தெம்புடனும் நிறைவாய்
வளைய வந்தனர்..,வடஇந்திய வழி வந்தப் பெண்கள்.
ஆனாலும் பாருங்க...வெளுத்துப்போன நிறத்தில்,நெற்றியிலேபொட்டும், கையிலே எந்த ஆபரணமும்
இல்லாமல், பார்த்தவுடன் தாக்கும் வெறுமையில், வெண் சுடிதாரில் வட இந்திய பெண்ணின் களை இழந்த முகத்தைப் பார்த்தபோது.....!
அவர் அருகில் அதே சாயலில்..... அப்படியே அவருடைய தாய்....
சற்றே வித்தியசமாய் நெற்றியில் கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு.
தேங்காய் எண்ணெய் தடவி, விரித்துபோட்ட சுருள் முடிக்கூந்தழில்
முடிச்சும் போட்டு, வகிட்டின் துவக்கத்தில் குங்குமமும், சற்றேகீழ் நெற்றியில் ஒற்றை
விரல் முத்திரையாய் சந்தனக்கீற்று இட்டு, உப்பென்று ஊதிய முகத்தில் நீண்ட மூக்கு
, மூக்கின் நுனியில் எப்போதும் குருவாயுரப்பன் நர்த்தனம் ஆட, புன்னகைக்க தயாராயிருக்கும்
முகத்தில்... தனித்துவமாக சற்றே முன் நீண்ட பற்கள்......., நாங்கள் கேரள தேசமாக்கும்
எனும் பூச்சூடி., தமிழ்க்காய் கறிகளைத் தேடித்தேடி தேங்காய்களுடன் வாங்கி பை நிறைத்துச்
சென்றனர்.
புன்னகைப்பூக்களில் இன்னும் பல மொட்டுக்கள் எனக்குள்ளே....!
எஜமானிஅம்மாள் கடைகடையாக காய்கறிகளை வாங்கி அடுக்க ,அதைச்சுமக்க
பதிணைந்து பதிணாறு வயதில் வேலைக்காரப் பெண்ணும்,
தன்னுடன் அழைத்து வந்த பேத்தியை மகிழ்விக்க கைகளில் பணக்கட்டை வைத்துக்கொண்டு,
நிற்க விரும்பாமல், ஆடியவாரே.., அந்தக்காலை
வேளையிலும் வாயில் பபுள்காமுடன்.., வயதானாலும் வயோதிகன் அல்ல எனும் வேடத்தில் ஒரு
குடும்பம்...பேத்திக்கு புரியவில்லை...ஆனாலும் அழுகவில்லை...!
அவரவர் உலகத்தில் அவரவர்..!
பல மொட்டுக்களில் இன்னும் சில மொட்டுக்கள் மலரவில்லை.!
ஒற்றை வயோதிகர் தனக்குமட்டும் அல்லாமல்., கைப் பிடித்து
அழைத்து வந்த., வயோதிகத்திலும் அன்பு பொழிந்து.,சினேகமாய்ப் புன்னகைக்கும் தன் மனைவிக்கும்
சேர்த்து அளவாய் காய்கறிகள் வாங்கிச்சென்றார்.
இத்தனைக்கும் நடுவில் விரித்துப்போட்ட சுருள் முடியின்
மீது தொப்பியும்.,சுடிதாரின்மேல் ஜீன்ஸ் ஜாக்கெட்டும்., பொட்டு வைக்காத முகத்தில் புன்
சிரிப்புடன் தன் ஜீன்ஸ் கணவனை கை பிடித்து அழைத்துக்கொண்டு..... YOU KNOW..…… YOU KNOW என சப்தமிட்டுக்கொண்டே ., வித்தியாசமாக விற்ற வெங்காயத்தண்டை
வாங்கிக்கொண்டு.,புஸு புஸு பொமரேனியன் நாய்க்குட்டிகள் கணக்காக., கர்ம சிரத்தையாக இங்கும்
அங்கும் அலைந்து கொண்டு இருந்தார்கள்.
ஒருவேளை சாப்ட்வேர் தொழிற்சாலையின் ரோபோட்டுக்களாக இருக்குமோ
என நினைத்தவுடன்
இன்னும் சில புன்னகை மொட்டுகள் மலர்ந்தன.
காற்றின் சருகுகளாய்... எநத மரத்தின் இலைகளோ தெரியவில்லை..!
அதிகாலை வேளையில் வேலைக்கு வந்த கார் ஓட்டுநர்கள், தத்தம்
குடும்பங்களை மறந்து, வேலை பார்க்கும் குடும்பத்திற்காக , கொடுத்தனுப்பிய பட்டியல்
பிரகாரம், காய்கறிகள் வாங்கிச்செல்லும் ஆண்களின் முகத்தில் புன்னகை தொலைந்திருந்த்து.
நீ பாதி.. நான் பாதி என்றில்லாமல்..“என்னிடம் கொடு.,நான்
பிடித்துக்கொள்கிறேன்... இல்ல.. இல்ல நானே தூக்கி வருகிறேன்..” “இதை இப்படி
வச்சுக்கோ.. இன்னும் ஏதாவது வேணுமா.. வாங்கனுமா....அடுத்தமுறை வரும்போது இன்னொரு பை
சேர்த்து எடுத்துட்டு வரலாம்..சவுகரியமா இருக்கும்...”
புரிந்து கொள்ளலில்...இப்படி ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து
கொள்ளும் என் மனைவி., ஜனக்கூட்டத்தின் நடுவிலிருந்து எனை நோக்கி வரும் பொழுது., அவர் முகத்தில் நிறைந்திருந்தது...........நிறைவு.
அருகில் வந்தபோது....என்னுள்மலர்ந்த புன்னகைப்பூக்களை
பூங்கொத்தாக கொடுத்துச் சொன்னேன்.........,
ப்ரியமே...!
இத்தனை பேர்களுக்கு நடுவிலும்..,
இத்தனைவருடங்களுக்கு பிறகும்.,
உன் மனதின் அழகு இளமையாக....
உன் முகத்தை அலங்கரிக்க
உன்னதமாகவே இருக்கிறாய்....
என்று நான் சொல்ல...
இருவரும் வாய் விட்டுச் சிரித்தோம்.
என் இரு சக்கர வாகனத்தில்.,எப்போதும் என் தோள் பிடித்து
அமர்ந்து வரும் என் மனைவி..,
உழவர் சந்தையிலிருந்து வீடு திரும்பிய அன்று...
என் இடுப்பை அனைத்தவாறு என்மீது காதலுடன் சாய்ந்து அமர்ந்து
வந்தார்.