எங்க ஊர்
கோயமுத்தூருங்க....
மின்னல்
அடிச்சு
இடி
இடிச்சு
கடும்
சூறாவளியோட நேத்து பேஞ்ச மழையில்...
முறிந்தது
போக, நின்றாடும் மரங்கள்,
மந்தாரமான
விடியலைக் கண்டு, பசும் புன்னகை பூத்த்து..
இன்று....
நகரத்தின் காவல் தெய்வமான
தண்டுமாரியம்மன் கோவிலில்
சித்திரைத் திருநாளின் ஒன்பதாம் நாள்.
அக்கினிப் பூச்சட்டி கையில் ஏந்தி,
அலங்காரப் பால்குடம்
தலையில் ஏந்தி, கோணியம்மன் கோயிலிருந்து
தண்டுமாரியம்மன்
கோயிலை நோக்கி, அம்மனை அழைத்துக்
கொண்டு திருவீதி உலா.
பக்தியெனும் சொல் கொண்டு ஒற்றைத் திருநாளில்
எத்தனை எத்தனை சந்தோஷம் அவர்களிடம்.
தனை மறந்து தன்னில் இருந்து வெளிப்பட்டு ”தாயே
தண்டுமாரியம்மா...!” எனும் மையப்புள்ளியைக் கூர்ந்து
நோக்கி, ஆர்ப்பரிக்கும் ஆட்டத்துடனும், உருமி
மேளம்
இசைக்க, சந்தத்துடன் அமைந்த பாட்டுகளுடனும்,
வெறுமையுடனும்,
வேண்டுதல்களுடனும்,அழுகையுடனும்,
சந்தோஷங்களுடனும், ப்ரியங்களுடனும், திருவீதி உலா
சென்றார்கள்.
புன்னகைத்தேன்....
அவர்களது
ஆர்வத்தைப் பார்த்து....
கை கூப்பினேன்
அவர்களது
பக்தியைப் பார்த்து....
சந்தோஷமாய்
தண்டுமாரியம்மன்........



No comments:
Post a Comment