Wednesday, February 29, 2012

விளம்பர உலகம்.

விளம்பர உலகத்தின் இன்றைய வளர்ச்சி
அழகு எனும் கலை உணர்வா....!
ஆபாசம் எனும் கலை உணர்வா....!


உச்சங்களின் தொகுப்பு
உதட்டு முத்தங்களிலும்
புடைப்புச்சிற்ப்பங்களிலும்
காணக்கிடைக்கிறது....

கோட்டோவியச் சித்திரமாக முகம் திருப்பிய
 மார்க்கச்சை விளம்பரங்கள் வந்த காலத்தில்
“நாயுடு ஹால்” என்ற பெயரை உச்சரிக்கவே
வெட்க்கப்படும் விடலைப் பருவங்கள் காணாமல் போயிற்று.

இன்றோ திரைப்பட விளம்பரங்களிலும்,
ரோட்டோர மிளிரும் விளம்பர பலகைகளிலும்
புடைப்புச் சிற்ப்பங்களாக மிக அருகாமையில் Tight Closeup
உள்ளாடை விளம்பரங்கள் வருங்கின்றன
அதுவும் ஆண்களின் உள்ளாடை விளம்பரங்கள்
அதீத உன்னதத்தின் அற்புதம்.

விளம்பர உலகத்தின் உச்ச கட்ட வளர்ச்சி,   நம் வீட்டு தொலைகாட்சிப்
பெட்டியில்,   சவரக்கத்தி Shaving Blade விளம்பரத்தில் வரும் வழுவழு முத்தக் காட்சி
அழகு எனும் கலைஉணர்வா ஆபாசம் எனும் கலை உணர்வா..............!


No comments:

Post a Comment