Wednesday, February 29, 2012

நிஜமாகிப் போன நிஜம்

விழிப்பின் இருட்டு
தூக்கத்தின் வெளிச்சம்
காற்றில் அலையும் மனது
கல்லாகிப் போன உணர்வு

கண்ணீர் தாரைகளாய்
முடிவில்லாத பயணம்

கனவில் மிதக்காத கவலைகள்
எதிலிருந்து எது
விடுதலையாவது?

விட்டு விடுதலையாவது எங்கே?

புன்னகையைத் தவிர்க்கும் உள்ளம்

கானல் நீராய்ப் போகாத கண்ணீர் நிஜம்.



No comments:

Post a Comment