சற்றேறக்குறைய
முப்பத்துஏழு டிகிரி வெயிலின் வெக்கை சற்றும் குறையாமல் இருந்த ஞாயிறின்
மாலைப்பொழுதில் கிக்கானி பள்ளி வளாகக் கலைஅரஙத்தில், மாலை6.30 மணிக்கு சீர்காழி சிவசிதம்பரத்தின்
தமிழ் இசைக் கச்சேரி துவங்கியது.
பிசிறுதட்டிய
தமிழ்க்குரலுடன் கணபதியை மிரட்டி அழைத்தார். தடிமனானகுரலில் மிரட்டிஅழைக்கப்பட்ட
கணபதி கடைசி வரிசையில் சென்று அமர்ந்து அருள் பாலித்தார்.
குழைவு, நெளிவு
எதுவுமின்றி உண்டிவில்லில் வைத்து நேராக குறி பார்த்து எறியும் பிரயோகத்தில்,என் அப்பன் சிவனை அழைத்து, “வேண்டத்தக்கது அறிவோய்
நீ..! வேண்ட,முழுவதும் தருவோய் நீ.....!.”எனும் திருவாசகப் பாடலை
எறிந்தார். எறியும் போது வெட்டிய கழுத்தின் வீச்சு பார்வையாளர்களின் மத்தியில் ஒரு
பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.
ஆனாலும் வார்த்தைகளின் தடிமனான குரல் பிரயோகத்தில் ஒரு
கம்பீரம் இருக்கத்தான் செய்கிறது.
ஒரு தம்புரா..,ஒரு வயலின்..,ஒரு மிருதங்கம்..., ஒரு
கஞ்சீரா...ஒரு மோர்சிங், அப்புறம்.....ஒரே...ஒரு கடம்....இசைக் கருவிகளின்
கூட்டமைப்பு சிவசிதம்பரத்தின் வாய் பாட்டுக்கு மிகவும் துணை செய்து , உயர்வு செய்தது.
எதுவும் சோடை போகவில்லை,...அதிலும் வயலினும் மிருதங்கமும் தமது பங்கை
மிகச்சிறப்பாகச்செய்தது.
ராக ஆலாபனைகளை அதிகமாகத் தொடாமல் , கை தட்டுதல் வாங்கும்
....
சின்னஞ்சிறு பெண் போலே..,சிற்றாடை உடை உடுத்தி.....,
மதுரை அரசாளும் மீனாட்சி...மாநகர் காஞ்சியிலே காமாட்சி....,
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா...
மரணத்தை எண்ணி கலங்கும் விஜயா.. போன்ற சீர்காழி
கோவிந்தராஜனின் பிரபல திரை இசைப்பாடல்களைத்தனக்கே உரித்தான தடிமனான குரலில் பாடி
கைதட்டு வாங்கினார்.
அவ்வப்போது ஒன்று இரண்டு பக்திப்பாடல்கள்.
ஏனோ தெரியவில்லை பழனி மலைக்குப் பின்னாடியிருந்தும் ,
திருச்செந்தூரின் கடற்கரை மணலிலிருந்தும் சீர்காழி கோவிந்தராஜன் நம்மை
பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்விலிருந்து
மீளமுடியவில்லை.
தமிழிசையின் இரசிகர்கள் அனைவருக்குமே குறைந்த பட்ச வயது
ஐம்பது.
அறுபது எழுபதுகளில் நிறைய பேர், எண்பதுகளில் பலர்.
பெரும்பாலானோர் திருநீற்று பட்டை இட்டு , சைவத்திருமுறை
ஓதும் வேடத்தில் , சிவபெருமானையே கக்கத்தில் இடுக்கிக் கொண்டு வந்து இருந்தனர்.
பழம் பெருமை பேசி, உழைப்பின் பிடியில் ஆழ்ந்து , முகத்தில்
பொலிவு இழந்து ,இறுகிய முகத்துடன் வந்து அமர்ந்திருந்தனர்.
ரசித்தனர், புன்னகைக்க முயற்சித்தனர் ,கை தட்டினர் , கைகளாலும் ,விரல்களாலும்
தாளம் போடத்தெரியாவிட்டலும்.... உச்சஸ்தாயில் சென்று முடிந்த தனி
ஆவர்த்தனத்திற்க்கு ஆர்ப்பரித்துக் கை தட்டினர்.
அதேபோல் ஒவ்வொருபாடல் முடிவிலும் கைதட்டி தத்தம் சந்தோஸங்களை பகிர்ந்து கொண்டார்கள் .
நான்குபேர் அரங்கத்திலிருந்து வெக்கை மற்றும் புழுக்கம்
காரணமாக வெளியே சென்றால் , ஐந்து பேர் தமிழிசையின் ஆர்வம் காரணமாக இருக்கை தேடி
அரங்கத்தினுள்ளே வருகிறார்கள்.
ஆனால்......
எங்கு தேடியும் வைர மூக்குத்தியோ ,பேசரியோ புளு ஜாகரில் காணக்கிடைக்கவில்லை.....!
வாழ்க தமிழ் இசை....! வளர்க தமிழிசை ஆர்வம்.......!
"எங்கு தேடியும் வைர மூக்குத்தியோ ,பேசரியோ புளு ஜாகரில் காணக்கிடைக்கவில்லை" -- நல்ல தேடல்தான் .....அவர்களை விடுங்கள் .பாடுபவர்களை பாருங்கள் , யாராக இருந்தாலும் நாம் "அள்ளி கொடுத்தால் பாடிவிட்டு போகிறார்கள் . சுதாவோ , சௌம்யாவோ ,அல்லது ..... யாராக இருந்தாலும் நம்முடைய கைதட்டலும் ,பை நிறைய பணமும் கொடுத்தால் வளர்த்துவிட்டு போகிறார்கள் தமிழ் இசையை..........
ReplyDeleteஎல்லாம் பணம் செய்யும் மாயம் !!!!!
நன்றி
திருமேனி
ரஸ்யா, பிரெஞ்சு திரைபடங்கள் பற்றியெல்லாம் கடுதாசி எழுதறீங்க...
ReplyDeleteஇதை மட்டும் சொல்லாமல் விட்டுட்டு வயித்தெரிச்சலை கிளம்பும் வண்ணம் கட்டுரை எழுதறீங்க....
எப்படியோ அனுபவிச்சா சரி... :) :)
தமிழ்ப் பயணி
nice, authentic report.
ReplyDeletevijayaragavan victory