Wednesday, June 20, 2012

திருமண வரவேற்பு




கண்ணின் மணி சுருங்கி விரிந்தபோது......பூஞ்சிரிப்பு  பூத்து மலர்ந்தது........
திருமண வரவேற்பில் நின்று இருந்த மணப்பெண்ணின் தந்தையார் முகத்தில்......!

மணப்பெண்ணின் தாயாரின் முகமோ....மகிழ்ச்சியின் மகிழ்ச்சியாக இருந்தது அவர்களின் வரவேற்பில்...ஓரு தனித்துவம்....மேடைக்குச் சென்று தன் மகளை ஆசிர்வதித்து..பின் விருந்துண்டு ....மீண்டும் காலை முகூர்த்ததில் கலந்து கொண்டு அட்சதை தூவி வாழ்த்துங்கள் என்று பிரியத்துடன் வரவேற்றார்.

வரவேற்பிற்க்கு சற்று அருகே ..,சின்னஞ்சிறு கூட்டத்திற்கு நடுவே......

மிருதங்கமும்..,கடமும்.. தனி ஆவர்த்தனம் செய்ய..வயலின் வெறுமனே இருக்க., தேமே என்று கண்களை உருட்டிக்கொண்டு இருந்தார்......பிரபல கர்னாடக இசைப் பாடகி திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள்.

தனி ஆவர்த்தனம் முடியும் தருவாயில் வயலினுடன் சேர்ந்து “தாயே யசோதா”வை மீண்டும் இரட்டை வரிகளில் அழைத்து சிரியதாக கைதட்டல் பெற்றார். தொடர்ந்து சின்னஞ்சிறு கிளியே...,தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற வழக்கமான உருப்படிகளுக்கு நடுவே மணமக்கள் வீட்டாரின் சால்வை போர்த்தும் நிகழ்வை ஏற்றுக்கொண்டு
நாழியைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே..சட்டென்று முடித்துக் கொண்டார் கச்சேரியை.



மேடையில்.,மணமக்களைச் சந்தித்தபோது...சந்தோசம் பொங்கும் குரலில் ”அங்கிள்”என மகிழ்வுடன் அழைத்து எங்கள் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். வாஞ்சையுடன் வாழ்த்துக்கள் சொன்ன தன் தோழி அனிதாவை அரவனைத்துக்கொண்டார். என் மனைவியிடமிருந்து பெற்ற பரிசுப் பொருள் சமையல் கலைப்புத்தகம் என்று அறிந்து “அங்கிள்...இதெல்லாம் என் கணவருக்குதானே....!”என்று சொல்லி சூழ்நிலையை கலகலப்பாக்கினார்..... மணப் பெண்.

அப்புறம் என்ன......கைகளில் தட்டு ஏந்தி ....வேண்டியதையும் வேண்டாததையும் அள்ளிப் போட்டுக்கொண்டு.....நின்ற வாக்கில் கொறித்து உண்டு கொண்டு.....சமையல் கலைஞர்கள்
யாரு...விதவிதமான பதார்த்தங்களின் பெயர் என்ன..? என்று பேசிக்கொண்டே சுற்று முற்றும் பார்த்தால்.....தெரிந்த முகங்களின் புன்னகை நிறைந்திருந்தது.

நிறைவாய்ப்.....புன்னகைத்து விடைபெற்று கிளம்பும் போது...கோவை மாநகரம் கொடுத்து வைத்த மாநகரம்..தெற்கு எல்லையில்  இத்தனை கம்பீரமாய் அமர்ந்து அருள் பாலிக்கும் ஈச்சனாரி விநாயகப்பெருமானைப் பெற்றிருக்கிறதே  ....என்று மனதில் நினைத்து வணங்கிச் சென்றேன்... மாநகர் நோக்கி.

என் திருமதியின் கூந்தலில் சூடியிருந்த முலலை மலர்களின் நறு மணமும் சேர்ந்து..,
தென்மேற்குப் பருவக்காற்றின் குளிர்ந்த தென்றல் எங்களை அனைத்துக் கொண்டது...!

No comments:

Post a Comment