Wednesday, June 6, 2012

பருவகாற்றின் முதல் துளி.........

கதம்பம் .............!


 பருவகாற்றின் முதல் துளி.........  
வெக்கைக்கு இன்னும் விடைகொடுக்கவில்லை .,
அதிகாலையின் இளந்தென்றல்.சற்றே தாமதமாக துவங்கிய பருவக்காற்றின் மழை மேகங்கள்.,பிரம்ம முகூர்த்தத்தில்.,
தெருவெங்கும் தெளித்திருந்தன மழைத்துளிகளை.

காலை நேரத்து நடைப் பயணத்தில்.,தன் மேல் விழுந்த மழைத்துளியின் வேகத்தில் பட்டுத்
தெறித்த தெருப் புழுதிகள்.,உருண்டு ஓடியிருந்தன .........பொருமலாக....
என் கீழ் உதட்டின் மேல் பட்டுத்தெரித்த முதல் மழைத்துளியைச் சுவைத்தேன்.
’ஜில்’ என்று இருந்தது என் புன்னகை.


புன்னகை என்றதும்       நினைவில் வந்தது  மணமக்கள் நின்று இருக்கும் திருமணவரவேற்பு
’ப்ளெக்ஸ் பேனர்’     
பெரும்பாலும் ......இவர்தானா..இவர்தானா எனும் நினைவினில் மணமகனும்., என்தலையில்
கட்டி வைத்துவிட்டார்களே என்னும் உணர்வில் இருப்பது போல் மணபெண்ணும் ., புன்னகையைத் தொலைத்து விட்டு.......
.ப்ளெக்ஸ் பேனர்’களில்  முகம் காட்டுகிறார்கள் .


இன்னும் பலர் மனதுக்குள்  இருக்கும் சந்தோசத்தை முகத்தில் காட்டத்தெரியாமல் விழிக்கிறார்கள்

புகைப்படத்தில் புன்னகைப்பது ஒரு அற்புதமான கலை..
அதை புரிந்து கொண்டு  இயல்பாய் புன்னகைக்க
முயற்சி செய்யுங்களேன்  மணமக்களே.


அட்லீஸ்ட்   கடைசி முறையாகவேணும்....!            

1 comment:

  1. அந்த கடைசி வரி ..
    கவிதே கவிதே....


    கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete