Friday, January 18, 2013

கம்பாநதி.............வண்ணநிலவன்






வண்ணநிலவனின் கம்பா நதியின் கதாபாத்திரங்கள்  , . ராட்டை நூலினால் அடர்த்தியாக நெய்யப்பட்ட காடா  துணி போன்று .. பாளையங்கோட்டையின் எந்த குறுக்குத்  தெருவில்  சென்றாலும்., உறவின் முறையிலோ., நட்பின் முறையிலோ ஜாதிய விழுமியங்களுடன் ஒருவருடன் ஒருவர் இணைந்தும் பிணைந்தும் இருக்கின்றனர்.

ராட்டை நூலின் பிசிறுகள் போல் வறுமை என்பது ., கதை மாந்தர்களின் வாழ்வில் ஒட்டியே உறவாடி வருகின்றது. நித்தமும் வாழ்வின் விடி வெள்ளிக்காக முயற்சியுடன் கூடிய கனவைக் காண்கிறார்கள். வேலை இல்லாத்திண்டாட்டமும் ., வறுமையும்..இடம் பெயர்தல் மூலம் மெல்ல மெல்ல மாறிக்கொண்டே இருக்கிறது.

ஊரின் சுகவாசத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர்களோ..மது,மாது மற்றும் சூதில் திளைத்து பிறப்பின் பயனை சுகிக்கிறார்கள்... குற்ற உணர்வு இன்றி. நட்பின் தொட்ர்ச்சியாக மலரும் காதல் , வாழ்வின் தோழமையாக விரும்பும் கணத்திலேயே ,ஜனனத்தில் மரணம் என்பது போல்,வறுமையின் சூழலில் கரைந்து போகின்றது.

வெள்ளைக் காடாத் துணியில் ஒற்றை கலர் நூல் கலந்தது போல.., நட்பு மற்றும் உறவின் தோழமை , ஜாதி மதங்களைக் கடந்து  இயல்பாய் இழைந்து கொள்கிறது.

அனுபவங்களின் ஞாபகமாக..வாழ்வின் துணை நிற்கும் இயற்கையின் கொடை... .இரகசியங்களை தன்னுள் புதைத்துக் கொள்ளாமல் தன் போக்கில் அடித்துச் செல்லும்..தாமிரபரணி ஆறு.., அதன் படித்துறைகள். மிக இயல்பாய் காட்சிப் பொருள் ஆகின்றன.

இதன் ஊடே ., கம்பாநதிக்கரை  மாந்தர்கள் ., தம்மை தமக்குள் தொலைத்துக் கொண்டு..தொலைத்த இடத்திலேயே தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
தேடலின் வசீகரத்தை உணர்ந்து கொள்ளாமல் .வாழ்க்கையை அதன் போக்கில் தள்ளிச் செல்கிறார்கள்.

விட்டு விலகிச் சென்றவர்களோ., தத்தம் வேர்களைத் தொலைத்துவிட்டு., கனவுகளை நிலை நிறுத்திக் கொள்ள மாய மான் வேட்டை ஆடுகிறார்க்ள்.அவர்களுக்குள் வெற்றி தோல்வி சகஜமகப் போய்விடுகிறது.

எல்லாவற்றையும் கண்டு கொண்ட.,கானல் நீராய்ப் போய்விட்ட கம்பா நதி எனும் வாழ்வின் தத்துவம் கதை மாந்தர்களின் வாழ்விழும் நிறைந்தும்., மலர்ந்தும்.,வறண்டும்... தன் வழித்தடத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறது......... எதைத்தேடி....?

No comments:

Post a Comment