Monday, December 31, 2012

தியாகு புக் சென்டரில்......கிறுஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஒரு மார்கழி உற்சவம்..


பஞ்சாட்சர மந்திரம்  நூலகம்  எங்கும்  நிறைந்திருக்க.........

சுவாசத்தில்  சந்தனம் புகையாய்  மணக்க.....................................................

மார்கழி  குளிர்  மறையும்  நேரத்தில்  நூலகத்தில்  நண்பர்கள்  ஒவ்வொருவராக கூடினர் .


சென்னை   சபாக்களிலும் .,  பிரத்யேகக்   கச்சேரிகளிலும்  தேடிச்   சென்று   சங்கீதத்தின்   சங்கதிகளை  கேட்டு  கேட்டு ., 
கேள்வி ஞானத்தில்  பரவசப்  பட்டவர்.....நணபர்  மித்ரன்  அவர்கள்.




தான்   பிறந்து   வளர்ந்த    சூழ்நிலையில்    ....தாயார்   மற்றும்  சுற்றத்தவரின்....  அரவணைப்பில்.,   உற்று   நோக்கும்  உன்னதத்தில்.,  உள்வாங்கிக்   கொண்ட   இசை  அறிவை.,    

ம்  குழந்தைச்  செல்வங்களின்   இசை  அறிவு   வளர்ச்சியின் போது ...... தன்  தேடலின்   நோக்கில்   செழுமைப்   படுத்திக்   கொண்டவர்....
நண்பர்  சுரேஷ்.




நூலக  உறுப்பினர்  நண்பர்...... கும்பகோணத்துக்  காவிரிக்  கரைக்  காரர்....... ஒரு  பத்து  பன்னிரண்டு    ஆண்டுகள் சங்கீதத்துடன்.,   கட்டிப்புரண்டு  விட்டு...   
வாழ்வின்   பொருள்   தேடலின்   பொருட்டு   பங்களூரில்   ..., 
சாப்ட்வேர்  இண்டஸ்ட்ரியில்   சுழன்று   கொண்டே...   
இலக்கியத்தையும்... , இசையையும்      அசைபோட்டு  ., சுவைத்துக்  கொண்டிருக்கும்  நண்பர்  ஆனந்த். 





பூர்வீகம்   மாயவரம்   பக்கத்தில்.,  வளர்ந்தது   சென்னை.,   மருத்துவம்  படித்தது  தஞ்சாவூர்   காவிரிக்   கரையில்.... 
எங்கும் சூழ்ந்து   இருக்கும்  சங்கீதச்   சூழ்நிலையிலிருந்து   வந்து ...  கோவையின்   சுவைமிகு   செழுமையில்   நிலைத்து   
நின்று விட்ட...பிரபல  மருத்துவர்.... திருமதி. ராதாரமணி   அவர்கள்




 
ஷாபிரதர்ஸ்.....என்று நன்கு  அறியப்பட்ட...  நண்பர்  பரேஷ் அவர்கள்  சூழ்ந்து  இருக்க




இந்த   நூலகத்தின்   செல்லக்குட்டி........திருமதி. அனிதாஜோதீஸ்குமார்....  அவர்கள்   எரியும்  மெழுகுவர்த்தியுடன்   வந்த  கேக்கை..,
 கிறுஸ்துமஸ்   வாழ்த்துக்களுடனும்.,  கை  தட்டல்களுடனும்.,  மிகுந்த   சந்தோஷங்களுடனும்......, ஊதி   அணைத்து.,
வெட்டிப்  பகிர்ந்து .....அனைவருக்கும்  வழங்கினார்.


மொறுமொறு  உழுந்து  வடையும்  ... ப்ரூ  காபியும்  சுவைத்த பின்னர்....  இசை என்னும்  சுவையை  செவிகளும்   ருசிக்க  ஆரம்பித்தன.


எடுத்த  எடுப்பில்  ....... கண்ணா.... கிருஷ்ணா....பால கோபாலா.... உன்னை  உள் வாங்கி..., உன்  சகலத்திலும்  உன்னை  உணர  முற்பட்டு ..,   ஒப்புவமை  இல்லாத..   கருணைக்  கடலான.....
திரு வேங்கடவா.....ஹரிஹரா...... நாராயணா....... 

என  தன்னிலிருந்து  தானாக கரைந்து  போகும்  உணர்வை  ஏற்படுத்தும்...........


அன்னமாச்சாரியாரின்  கீர்த்தனையான

”பாவயாமி   கோபால    பாலம்....மன  சேவிதம்” என   சர்வ  சாதரணமாக   பாட  ஆரம்பித்தார்  நண்பர்  ஆனந்த்.

சுருதிபெட்டி இல்லை;  வயலின் இல்லை;   கடம் இல்லை;
தம்பூரா  இல்லை.........

குரல் வளத்தின்  இனிமையில்  அனைவரையும்... பாலகோபலனை  உணரச் செய்தார்  ஆனந்த்.


குஜராத்தியில்  பேசி, ஆங்கிலத்தில்  படித்து யோசித்து., தமிழ் புரிந்து  பேசும்   பரேஷ்  ., சொக்கிப்  போய்  அமர்ந்திருந்தார்.


வேதமாகிய  ராமநாமத்தை   சரணத்தின்  நடுவில்  ஆரம்பித்து   ..... சின்னதா  ஒரு  ஆலபனை   செய்து.........


 பல்லவியின்   துவக்க வரியான  “ராம  நாமம்  ஒரு  வேதமே.......!”

என்று   கை  தட்டல்களுக்கு  இடையே  முடித்தார்  ஆனந்த்.


அப்புறம் .....என்ன....! சுரேஷும்.. ஆனந்தும்   திரை இசைப் பாடல்களில்  புகுந்து விளையாடினார்கள்.

அதுவும் ..சுரேஷ்...மிமிக்கிரி    எபெக்ட்டை நடுவில .. நடுவில  கொடுத்து., தனக்கே உரித்தான முகபாவத்தோடு ரசிகத்தன்மையோடு  வெளிப்படுத்தினார்.

இளைய ராஜாவின்  திரை  இசையைத்  தொட்டு விட்டு.....

பி,பீ.ஸ்ரீநிவாஸ்....டி.எம்.எஸ்......எம்.எஸ்.வி...கே.வி.மகாதேவன்...... கூட்டணியில்  மலர்ந்த  எண்ணற்ற பாடல்களில்
சிலவற்றை  அவர்கள்  இருவரும்   பாட........

கச்சேரி  களை கட்டியது.....

கண் மையேந்தும்   விழியாட....

தோள் கண்டேன்... தோளே  கண்டேன்...

மெளனமே..  பார்வையால்  ஒரு  பாட்டு பாடவேண்டும்...

நிலவே  என்னிடம்  மயங்காதே....   உருகி   உருகி  பாடி  பரவசப் படுத்தினார்கள்.

சங்கதிகளை  அடையாளப் படுத்தினார்கள் .

ஏன்  சிரித்தாய்  என்னைப் பார்த்து.....என்ற  பாடலின்  பொடி..பொடி சங்கதிகளின்  இசை இன்பத்தை  எங்களுடன்  பகிர்ந்து கொண்டார் ...நண்பர்  சுரேஷ்’

சின்ன சின்ன கண்ணனுக்கு... என்னதான்  புன்னகையோ........ என்று  புன்னகைத்து  பாடிக்கொண்டு  இருந்த போது

“க்ரை” அமைப்பின் சார்பில் வந்திருந்த பிரதிநிதிகள் இருவர்  ., அந்தப் புன்னகையில்  மெய் மறந்து  நின்று இருந்தார்கள்.

அதிலும் அந்தப்  பெண்  பிரதிநிதியின் முகத்தில் நிறைவான சந்தோஷம்.
சங்கதிகள் நிறைந்த வாழ்வின் இந்த நிமிடங்கள் இனிமையாக இருந்தது.


”ஹேப்பி....கிறுஸ்மஸ்”


No comments:

Post a Comment