Monday, February 27, 2012

அதிகாலை வேளையில்........உப்புமா

பின் பனிக்காலத்தின் இதமான குளிர்....கதகதப்பான உறக்கத்திலிருந்து கண் விழித்தபோது மெலிதாகப் பசித்தது.அன்னபூர்ணாவில் காப்பி சாப்பிட சென்றேன்......

இப்படியா செய்வாங்க
... ஒரு கப்பு சாம்பார்லங்க நுங்கு போலே வெந்த ரெண்டு முழு சின்ன வெங்காயம் என்ன ருசிங்கரீங்க
மனுசன் போட்டது தான் போட்டான் கொஞ்சம் பெரிய துண்டா போட்டு இருக்கலாங்க, இத்துனூன்டு, சின்னதா முருங்கக்காய்ங்க... அப்படியே பூப் போல வெந்து கரைஞ்சு இருந்ததுங்க.

அந்தத் தேங்கா சட்னியில தாளிச்சு போட்ட கடுகில கூடே தனி சுவைங்க.
எல்லாத்தையும் கலந்து சாப்பிட்ட ரெண்டு ஸ்பூன் உப்புமாவுக்குள்ளே ஒரே ஒரு முந்திரிங்க....!

ஆனா பாருங்க திடீர்னு ஆறாவது ஸ்பூன் உப்புமாவுக்குள்ளே முழுசா ஒரு முந்திரிங்க..

நாக்குல வெச்சா.... பாகா கரையுதுங்கே. கடைசி வாய் உப்புமா கூட சுடச் சுட ஆவி பறக்கிற ஸ்டராங் காப்பிங்க, மூனு சிட்டிகை சக்கரை சேர்த்து சாப்பிட்டேன் பாருங்க.....



இன்னைக்கு பூரா நாக்கின் நுனியிலே காப்பிதான் போங்க....


ம் ம்... பெருமூச்சு விடாதீங்க

2 comments:

  1. ம் ம் ... இன்னைக்கு காலையிலே சேலம் போய் பஸ் ஸ்டேண்டுக்கு பக்கத்திலே உப்புமா சாப்பிட்டேன் . அது உப்புமாவ ஜெயில்ல கொடுக்கறா களியான்னு இது வரைக்கும் தெரியலை. சாம்பார் மிளகு ரஸம் மாதிரி இருந்திச்சு... சட்னிக்கு தேங்கா போட்டு அரைச்சாங்களா இல்லே தேங்கா நாரைப் போட்டு
    அரைச்சாங்களானு இது வரைக்கும் தெரியலை....



    கே.எஸ்.ரமேஷ் சேலத்திலிருந்து...

    ReplyDelete
  2. ரொம்ப ப்ராமாதம் போங்க......

    ஆனா இந்த் கலோரி விஷயம் கொஞ்சம் பாத்துக்கணம்ங்க...


    சென்னையிலிருந்து சுரேஷ் AGS

    ReplyDelete