உண்மையிலே சென்னை மாகான கவர்னர் ஆர்தர் லாலி பேர்ல வச்ச லாலி ரோடு மருதமலை ரோடா மாறிப் போச்சு...
சென்ட்ரல்
தியேட்டரிலிருந்து வர்ர கவுலிபிரவுன் ரோடும்., மருதமலை ரோடும்..., தடாகம்
ரோட்டில் ....முட்டிக்கிற முக்குக்கு பேர்தான் “லாலி முக்கு”
அம்மாவாசை.,பெளர்ணமி
மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்தில் ஜொலிப்பார் சங்கிலிக்
கருப்பன்ன சாமி.! உளவியல் சார்ந்த மன அமைதிக்கும்., பாதுகப்பிற்கும்....
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு... தன்னம்பிக்கையின் ஊற்றுக்கண்ணாய்
விளங்குபவர் சங்கிலிக் கருப்பன்ன சாமி....!
அந்த வெள்ளிக்கிழமை காலைப் பொழுதில்., நூலகத்திற்கு
செல்லும் வழியில். லாலிமுக்கு போக்குவரத்துச் சிக்கலில் சிக்கிக்
காத்திருந்த போது..........., நற்சந்தியில். ,சங்கிலிக் கருப்பன் குடிலின்
வாயிலில்., கூப்பிய கரங்களுடன்., கண்மூடி.., மெய் மறந்து.......
முகத்தின் மஞ்சள் மிளிர.., நெற்றித்திலகத்தின் மேலே... திறுநீறுடன்..
குங்குமம் கீற்றாய் மிளிரிட..., முகமெங்கும் நிறைவாய் பக்திப்
பெருக்குடன்., உயரமான உடற்கட்டில்., பளீரிடும் வண்ணச் சேலையில்.,
கூந்தலில் மலர்ச்சரத்தோடு ., முகத்தில் பக்திப் பரவசத்துடன் மின்னும்
புன்னகையுடன்.... முழுவதும் தனக்கே தனக்கான.... சங்கிலிக் கருப்பனார் .!
எனும் ஆக்கிரமிப்பில் ., தனை மறந்து பக்தியில் அதீதமாக மூழ்கி
இருந்தார்....அந்தப் பெண்மணி.
எட்டி எட்டிப் பார்த்தேன்......! சங்கிலிக் க்ருப்பனாரின்
அருள் புன்னகை ....துளி கூட எனக்குக் கிடைக்கவில்லை......! முச்சூட்டையும்
அந்தப் பெண்மணியே எடுத்துக் கொண்டார்.
மீண்டும்..
இந்தவாரம் வெள்ளிக்கிழமை., சற்று தொலைவிலேயே போக்குவரத்துச் சிக்கலில்
மாட்டிக்கொண்டு., மெள்ள சங்கிலிக்கருப்பன் கோவிலுக்கு ஊர்ந்து ., ஊர்ந்து
வருவதற்குள்., சென்ற வாரம் நான் சந்தித்த பெண்மணி ., தன் பக்தியை சென்ற
வாரம் போலவே சமர்ப்பித்துவிட்டு ..., சற்றே நகர்ந்து சென்று விட்டார்.
என் முறை வந்தது . சங்கிலிக் கருப்பனை தரிசிக்க கோவிலினுள் எட்டிப் பார்க்க......
........ பகீரென்றது...!
........ பகீரென்றது...!
“சங்கிலிக் கருப்பனைக் காணவில்லை”
சுற்றுமுற்றும் பார்த்தேன்... பக்தி வெள்ளத்தில் தான் உருகி......தன்
பாசத்தாலும் ., நேசத்தாலும் ., ப்ரியத்தாலும்., அதீத அன்பாலும்.,ஆட்கொண்ட
அந்தப் பெண்மணியின் இடுப்பில் சங்கிலிக்கருப்பனார் அமர்ந்திருக்க..அந்தப்
பெண்மணி தன் வழியே சென்று கொண்டிருந்தார் அமைதியாக....!
அச்சச்சோ.......! சங்கர அய்யர்........வந்தாத்தேடுவாரே. .....!
கோவிலின் சுவற்றில்..... உபயம்; தேனி மாவட்டம்,வே. சங்கர அய்யர்ன்னு எழுதி இருந்தது.
முகத்தில் களைகட்டிய புன்னகையுடன் பயணித்தேன் நூலகம் நோக்கி....!
--
Thiagarajan.....

Thiagarajan.....


No comments:
Post a Comment