உன் கண்ணில் நீர் வழிந்தால்....................!
விரிவும் ஆழமும் கூடிய உறவுகளின் உணர்வுகள் அருகிப்போன
இந்தக் காலத்தில் ...,1970 தில் ., வியட் நாம் வீட்டில் உயிர்
ஓவியமாய் மலர்ந்த பிரெஸ்டீஜ் பத்மனாபன் தம்பதியரின்
பாடல் காட்சிகளை இன்று தொலைக்காட்சி
பெட்டியின்வாயிலாகக் கண்டேன்.
வாழ்வின் வசதிகளுக்காக பொருளைத் தேடி ஓடும் இன்றையை
காலகட்டத்தில் நாம் தொலைத்ததுதான் எத்தனை எத்தனை .
எல்லை இல்லாத புரிதலையும்..., ஏற்றுக்கொள்ளுதலையும்
அன்புசெலுத்துதலையும் தொலைத்த தருணங்கள் எவை .
”உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி”
சிறப்புக்கு சிறப்புச்செய்யும் உன்னதமான நிலை.
ஒட்டுமொத்த சரணாகதித் தத்துவத்தில் யார் உயர்ந்தவர்கள்.,
யார் தாழ்ந்தவர்கள். புரிந்துகொண்ட ஈசன்., உமையவளுக்கு.,
தன் இடப்பாகத்தைக் கொடுத்து அர்த்தநாரீஸ்வர
தத்துவததில் உதாரண புருஷனாக இருக்கிறார்.
ஆலம்விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான்
வீழ்ந்துவிடாதிருந்தேன்......
தாய்க்குபின் தாரமாய் வந்து ஆணிவேராய் நிலைநின்று
அரவணைத்துச் செல்லும்
அந்த உன்னதம் எங்கே...............?
"என் தேவையை யார் அறிவார்
உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்...."
இறையருளின் உன்னதத்துடன் ஒப்பிட்டு நோக்கும் காதல்
காணாமல் போனது எங்ஙனம்.....?
த்யாகு அவர்களே
ReplyDeleteஈசன் உமையவளுக்கு இடப்பக்கம் இடம் தந்த அதே வேலை
கங்கைக்கு சிரசிலும் இடம் தந்தவன்.
இன்றைய உறவுகள்
தற்செயலானவை. பரஸ்பர சுரண்டல்களை அனுமதிப்பவை.
தற்காலிகமானவை. ஆழமற்றவை. புரிதலற்றவை.
என்ன எதுவுமே இல்லாமலா இன்று எக்ஸ்பிரஸ் Avenue விழும்
brook fields லும் ஜோடிகள் உற்சாகமாக உல்லாசமாக வளம்
வருகிறார்கள் என்று கேட்பது புரிகிறது.
இருக்கிறது.
சுய நலம் உண்டு. பொருளாதார சமரசங்கள் உண்டு.
அதனால் இன்று யாரும் பத்மநாபனை போல
உதிரம் கொட்ட மாட்டார்கள்.
உடனடியாய் விவாகரத்து நோட்டீஸ் இல் கையெழுத்து இடுவார்கள்.
"உமை"களும் அதே வேகத்தில் கடைசி விடுகிறார்கள்.
வாழ்க electronic தொழில் புரட்சி.
gopal
இன்று காலை தவமாய் தவமிருந்து படப்பாடல் கேட்டேன். "ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா " ராஜ் கிரணும் . சரண்யாவும் குழந்தைகளுடன் பாடும் பாடல். ஒரு எளிய அன்பான குடும்பம் நம் கண் முன். மனம் கசிய வைத்த பாடல்.
ReplyDeletevijayaragavan victory