Thursday, March 1, 2012

கேட்பதும்... கவனிப்பதும்


அதீத மஞ்சள் வண்ணம் கலந்த
தக தககும் ஆரஞ்சு வண்ண பூப் பந்தாக சூரியன்........ அழகு....

சுடச்சுட ஆவி பரக்கும் 
அண்ணபூர்னா காப்பி....         ....சுவை.... 


புன்னகைத்தேன்.


காலை 7 மணிக்கு என் மகனை பள்ளிக்கு அழைத்து சென்ற போது, சாலையின் இரு மருங்கிலும் நீண்ட வரிசையில், லாரிகள். 


எதுக்கப்பா காத்திருகின்றன இந்த லாரிகள்?

அருகே இருந்த எடை மேடையையும் பக்கத்தில் இருந்த 
இந்திய உணவுக் கழகத்தின் கிடங்கையும் தொடர்பு படுத்தி, 

எடை மேடையைப் பற்றியும் 
இந்திய உணவுக் கழகத்தைப்  பற்றியும்
காலியாக உள்ள லாரியின் எடையைப் பற்றியும் 
எடை ஏற்றப் பட்ட லாரியின் எடையைப் பற்றியும் 
நான் சொல்லிக் கொண்டே போக 
சட்டென்று நகர்ந்து விட்டார்..... கவனிப்பதிலிருந்து.


எப்படி, என்ன இது ........ என்று கவனமாக  கேட்டுதெரிந்த காலம் காணாமல்போயிற்று
பெரும் பாலும் கேட்பது - Hearing -  நிகழ்கிறது.
கவனிப்பது - Listening - இல்லாமல் போயிற்று. 

ஒரு வேளை குறை  நம்மிடமோ.....
இன்னும்  சுவை பட  சொல்லியிருக்கலாமோ....

 போங்கப்பா உங்களுக்கு வேற வேலையில்ல........!

 

1 comment:

  1. Listening is the best part of a conversation!

    ஆனா நம்ம ஆட்களிடம் இருக்கிற பிரச்சினை என்னென்னா,

    "அதெல்லாம் சரி தான், மேட்டர் சுவாரஸ்யமா இல்லையே பா", என்றும்;

    "ஹ்ம்ம்ம்.. ம்ம்ஹும்ம்,ஓஒ, எல்லாம் சரி இதனால எனக்கென்ன பயன்", என்றும்;

    "இருக்கட்டும் இருக்கட்டும், எனக்கு வேற சோலி இருக்கு", என்றும்,

    உள்ளூர நினைத்து, வெளியூற சிரித்து, அக்கணம் மறந்து, கடமையை நினைத்து நடை போடும் நடையையே வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.

    சினிமா செய்திகள், சச்சினின் சதம், பாராளமன்ற சர்ச்சை என பேசுகையில் வந்து குவியும் காதுகள்,
    பிடித்த புத்தகம், பிடிக்காத அன்றைய நிகழ்வு, பிடிக்கும் உரையாடல் என்று வருகையில் பொறுப்பாய் பம்மி கொள்வதை கண்டு கோபப்படுவதா? வருத்தபடுவதா?

    உற்று 'கவனிக்கையில்', பதில் முக்கியமல்ல, கேள்வியை காட்டினில்!

    விலகி ஓடிய அந்த அவசர மனிதனை நினைக்கையில் தட்டி கேட்க தோன்றுகிறது, நிரந்தரமான இயல்பு கொண்ட உரையாடலின் உன்னதம் கலைத்த அவர் தற்காலிகத்தை...

    ReplyDelete