Saturday, March 3, 2012

கடிதம்

எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய எதிர்பக்கம்

what முதலியார் .. எப்பிடி இருக்கீங்க ?

பாலகுமாரன் எழுதிய எதிர் பக்கம் ஞாபகமிருக்கா ? அதை பற்றி பேசி இருக்கோம் . தேடி கிடைக்காமல் விட்டு விட்டோம். எதோ காரணத்தால் அதை படிக்க வேண்டும் என்று பல நாள்  தேடியதில், ஒரு வழியாக படித்து விட்டேன் சமீபத்தில்.  "நானே எனக்கொரு  போதிமரம்"  என்கிற சிறுகதை தொகுப்பில் அந்த கதை உள்ளது. 

எதுக்கு இப்போ சொல்றேன்னா.... போன வாரம் ஆடிடர் ரத்தனை பார்த்தேன். சுமார் மூன்று வருடங்கள் கழித்து. அதை உங்களிடம் கூறிய பொழுது... " ஜென்மம் சாபல்யம் அடஞ்சுதா" னு கேட்டீங்க.  என் ஜென்மம் சாபல்யம் அடையாது. அவ்வளவு தப்பு பண்ணிருக்கேன்.  நடு கூடத்துல படுக்க போட்டு மூக்குல ரெண்டு பஞ்சு  வெச்சு, என்னோட அத்தியாத்த முடிக்கற வரைக்கும் பல ஏமாற்றங்கள, தவறுகள, தவற விட்டது எல்லாத்தையும் சுமந்து தான் ஆகணும்.  அந்த வலி என்னோட இருக்கத்தான் போகுது. அது வேற விஷயம். சொல்ல  வந்தது  என்னன்னா , போனது  எதுவும் திரும்ப வரபோவதில்லை ,  எந்த நினைவும், எந்த சந்தோஷமும், எந்த நிகழ்வும், ஒரு முறை தான் என்கிற பாடம் படித்ததை பற்றி.  மீண்டும் அதை உயிர்பிக்கும் முயற்சி முட்டாள்தனம் என்கிற புரிதல் கிடைத்தது. பின்னோக்கி செல்ல முற்படக்கூடாது. 15 வருஷத்துக்கு  முன் தினம் கடையை அடைத்து விட்டு, வாசல் படிக்கட்டில் அமர்ந்து ரெண்டு கடலை மிட்டாயும் ரெண்டு சிகரெட்டும் காலி செய்து விட்டு, பிரிந்த எத்தனையோ இரவுகளை நினைவிருக்கிறதா ?  அதை இன்று  நினைத்து தான் பார்க்கவேண்டும். மீண்டும் செய்ய முற்பட்டால் செயற்கையாக இருக்கும்.  மாற்றங்கள் தினம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.  மனிதர்கள், சூழ்நிலைகள், எண்ணங்கள், எல்லாமும் மாறி விடுகிறது.சந்தோஷம் கூட கிடைக்கும் காரணங்கள் மாறி விடுகின்றன. அன்று நண்பர்களுடன் வெட்டி அரட்டையில் சந்தோஷம். இன்று அது வேறு விதமாக. நிரந்தரமான சந்தோஷங்கள் நினைவுகள் மட்டுமே. இன்றைய தின-வாழ்க்கையில் அது இல்லை. தொலைந்து விட்டது. அல்லது முட்டாள்தனமாக தொலைத்து விட்டோம். பல  உறவுகள் காணமல் போய் விட்டன. சில உறவுகள் ஏமாற்றி விட்டன. என்னைபோன்ற முட்டாள்கள் அதை மீண்டும் தேடி, இன்றைய வாழ்கையை தொலைக்கிறார்கள். ரத்தனை போன்றவர்கள் வாழ்க்கையில் வென்று புது சந்தோஷங்களை பெறுகிறார்கள்.

இதில் நீங்கள்  எங்கே இருக்குறீர்கள். ?

அன்புடன்
ரமேஷ் ஐயங்கார்
(பெங்களூரிலிருந்து ஒரு சோகமான காலை பொழுதில்)

1 comment:

  1. இன்று தான் பார்த்தேன் என் கடிதத்தை இங்கே. அது இங்கே என்ன செய்கிறது என்று யோசித்தேன். எதற்காக முதலியார் இதை இங்கே மேடையேற்றினார் ? அதில் உள்ள உயர்ந்த இலக்கிய தரதிற்க்காக என்று நம்புமளவிற்கு முட்டாளாக இருந்தால் பெருமை படலாம்.
    அது இங்கே வேண்டாம் முதலியார் . எதையோ உணர்ந்து, எதையோ நினைத்து, தன மீதே இருந்த கோவத்தின் ஒரு பலவீனமான கணத்தில் ஒரு பழைய நண்பனுக்கு எழுதியது .எழுதியவர்க்கும், எழுதபட்டவர்க்கும் மட்டும் அர்த்தமுள்ள, புரியக்கூடிய ஒரு கடிதம், பொதுப்பார்வையில் என்ன செய்கிறது. யாருக்கு என்ன புரியப்போகிறது ?
    ரமேஷ்

    ReplyDelete